தமிழக மாநில பாஜக துணைத் தலைவராக அண்ணாமலை நியமனம்!

 

தமிழக மாநில பாஜக துணைத் தலைவராக அண்ணாமலை நியமனம்!

தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கரூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், கடந்த 2011 ஆம் ஆண்டில் கர்நாடக மாநில பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்ததை தொடர்ந்து, இரண்டே ஆண்டுகளில் கட்கலா துணை பிரிவின் எஸ்பி ஆக பணியாற்றினார். அதனைத்தொடர்ந்து சில மாவட்டங்களில் தனது காவல்துறை பணியை தொடர்ந்த அண்ணாமலை, தனது பதவியை துறந்தார்.

தமிழக மாநில பாஜக துணைத் தலைவராக அண்ணாமலை நியமனம்!

அதன் பிறகு, தனக்கு விருப்பமான தலைவர் மோடி தான் என அறிவித்த அவர் கிராமப்புற பணிகளை சில காலம் செய்து வந்தார். இதனிடையே இவர் ரஜினியுடன் இணைந்து அரசியலில் பயணிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென தான் பாஜகவில் இணைய உள்ளதாக கூறினார். அதன் படியே கடந்த 4 நாட்களுக்கு முன்னர் டெல்லியில் ஜேபி. நட்டா தலைமையில் பாஜகவில் இணைந்த அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இன்று காலை கமலாலயத்தில் பேசிய எல்.முருகன், அண்ணாமலை பாஜகவில் இணைந்தது உத்வேகத்தை அளிப்பதாக கூறினார்.

தமிழக மாநில பாஜக துணைத் தலைவராக அண்ணாமலை நியமனம்!

இந்த நிலையில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற அதிகாரியான அண்ணமலைக்கு பாஜக துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பாஜக என்றாலே அண்ணாமலை பெயர் எழுந்து வந்ததால், இன்று அவருக்கு பாஜகவின் முக்கிய பதவி அளிக்கப்பட்டிருக்கிறது. துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.