சசிகலாவுடன் பாஜக பேச்சுவார்த்தை? கழட்டிவிடப்படும் எடப்பாடி?

 

சசிகலாவுடன் பாஜக பேச்சுவார்த்தை? கழட்டிவிடப்படும் எடப்பாடி?

சசிகலா வருகைக்குப் பின்னர் தமிழக அரசியல் களம் திடீரென சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஆனால் இப்போது சாந்தமாகிக்கொண்டே போகிறது. எப்படியென்றால் சசிகலா இணைவை ஏற்றுக்கொள்வீர்களா என அதிமுக தலைவர்களிடம் கேட்பதை விட்டுவிட்டு பாஜக தலைவர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சசிகலாவும் எந்த மூவ்மென்டும் இல்லாமல் மியூட் மோடில் இருக்கிறார்.

சசிகலாவுடன் பாஜக பேச்சுவார்த்தை? கழட்டிவிடப்படும் எடப்பாடி?

சசிகலாவைப் பொறுத்தவரை சட்ட ரீதியிலான சவால்கள் அதிகம் இருப்பதால் அதை முடித்துவிட்டு தான் அரசியலில் களம் காண்பார் என்கிறார்கள். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பேச்சுக்களும் அப்படியானதாகவே அமைந்துவருகின்றன. அந்த வகையில் தற்போது பாஜகவில் இணைந்த அண்ணாமலை ஐபிஎஸ்ஸிடம் சசிகலாவுடன் பேச்சுவார்த்தை குறித்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

சசிகலாவுடன் பாஜக பேச்சுவார்த்தை? கழட்டிவிடப்படும் எடப்பாடி?

பாஜக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை அவர் வந்தபோது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி பாஜக தேர்தல் களத்தைச் சந்திக்கும். சசிகலாவுடன் பாஜக தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார்.