திமுகவில் அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் முன்னிலை!

 

திமுகவில் அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் முன்னிலை!

திமுக பாரம்பரியம் கொண்ட குடும்பங்களில் அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் என்ற பெயர்கள் வைப்பது வழக்கம். மூன்று தலைவர்களின் ஒரு பெயராவது இருக்கும். அரிதாக அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்பட்டு விடும். அதன்படி இம்முறை திநகர் தொகுதியில் ஜெ.அன்பழகன் சகோதரர் ஜெ.கருணாநிதி, பட்டுக்கோட்டையில் அண்ணாதுரை, கும்பகோணத்தில் அன்பழகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுகவில் அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் முன்னிலை!

தற்போது தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் 142 தொகுதிகளில் திமுகவும் 91 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலையில் இருக்கின்றன. இந்த 142 தொகுதிகளில் அண்ணாதுரை, கருணாநிதி, அன்பழகன் ஆகிய மூவரும் முன்னிலையில் இருக்கிறார்கள். இதனை உடன்பிறப்புகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.