திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு!

 

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் அன்னதானம் வழங்கும் பணி மீண்டும் தொடங்கியிருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். பக்தர்களுக்காக இருப்பிடத்தில் இருந்து உணவு வரை அனைத்தும் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படும். பணக்கார கடவுள் என்று அழைக்கப்படும் திருப்பதியிலேயே கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. பக்தர்களின் வருகை தடை செய்யப்பட்டதால், வருவாய் குறைந்து உண்டியல் பணத்தை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு!

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இருப்பினும், நோய்த்தொற்றை கவனத்தில் கொண்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தயக்கம் காட்டினர். தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கோவிலில் வருவாய் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கும் நிலையில், கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த அன்னதான சேவையை மீண்டும் தொடங்க தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு.. தேவஸ்தானம் அசத்தல் அறிவிப்பு!

கே.எஸ்.ஜவகர் ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோவிலின் அனைத்து பகுதிகளிலும் போதிய அளவுக்கு அன்னதானம் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அலிபிரி நடைபாதையில் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்பதிவு இன்றி தரிசனம் செய்ய செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாவதால் கட்டுப்பாடுகளை தளர்க்க வேண்டும் என கோரப்பட்டது. இதற்கு பதிலளித்த தேவஸ்தானம், பாதிப்பை கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறது.