ரஜினி பர்த்டே ஸ்பெஷல் : ‘அண்ணாத்த’ படத்தின் அப்டேட்டை தட்டிவிட்ட சன் பிக்சர்ஸ்!

 

ரஜினி பர்த்டே ஸ்பெஷல் : ‘அண்ணாத்த’ படத்தின் அப்டேட்டை  தட்டிவிட்ட சன் பிக்சர்ஸ்!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ’அண்ணாத்த’ படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினி பர்த்டே ஸ்பெஷல் : ‘அண்ணாத்த’ படத்தின் அப்டேட்டை  தட்டிவிட்ட சன் பிக்சர்ஸ்!

நடிகர் ரஜினிகாந்தின் 168வது படமாக அண்ணாத்த திரைப்படம் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வெளியான இந்த அறிவிப்பில், இப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா என்று தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இதில் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மீனா ,குஷ்பு உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . டி இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினியின் பிறந்த நாளையொட்டி அண்ணாத்த படத்தின் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன் இயக்குநர் சிவா பேசியுள்ள வீடியோவில், அண்ணாத்த டீம் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் மேலும் மேலும் வளர்ந்து, நீண்ட ஆயுளுடன் இறைவனின் ஆசியுடன் வலம் வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் . மக்களின் ஆதரவுடன், இறைவனின் ஆசியுடன் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்குகிறது. மிகவும் சந்தோஷமாக உள்ளது நல்ல டீம் உடனும் சன் பிக்சர்ஸ் ஆதரவுடனும் மிகப்பெரிய படமாகி அண்ணாத்த வந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.