நிறைவுபெற்ற துணைவேந்தர் பதவி…சிக்குவாரா சூரப்பா?

 

நிறைவுபெற்ற துணைவேந்தர் பதவி…சிக்குவாரா  சூரப்பா?

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சூரப்பா. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக பதவி வகித்து வந்த இவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது.ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் சூரப்பாவின் மீது விழுந்த நிலையில் தமிழக அரசு கலையரசன் குழு என்ற விசாரணை கமிஷனை நியமித்து சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால் தனது மீது எந்த தவறும் இல்லை தமிழக அரசு வேண்டுமென்றே தன் மீது பழி போடுகிறது என்று சூரப்பா பதிலளித்தார். அத்துடன் சூரப்பாவுக்கு எதிராக குழு அமைத்தது நியாயமற்ற நடவடிக்கை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

நிறைவுபெற்ற துணைவேந்தர் பதவி…சிக்குவாரா  சூரப்பா?

ஆனால் சூரப்பா மீதான புகார்களில் முகாந்திரம் உள்ளது என கலையரசன் குழு தகவல் தெரிவித்தது. சூரப்பா நேர்மையானவர் என்று பல்கலைக் கழக நிர்வாகிகள் கூறுவது உண்மையல்ல என்றும் அதற்குத் தேவையான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கலையரசன் குழு தெரிவித்தது.

நிறைவுபெற்ற துணைவேந்தர் பதவி…சிக்குவாரா  சூரப்பா?

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்து வந்த சூரப்பாவின் பதவி காலம் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. அவர் மீதான ஊழல் புகார்கள் விசாரணையில் உள்ள நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் குழு இன்னும் 10 முதல் 15 நாட்களில் அடுத்த கட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூரப்பா பதவிக்காலம் நிறைவுபெற்றதால் விசாரணையில் இனி தொய்வுநிலை ஏற்படாது என்று தெரிகிறது. முன்னதாக தனது பதவி காலத்தை நீட்டிக்க வேண்டும் என சூரப்பா ஆளுநரிடம் கோரிக்கை வைத்த நிலையில் அது குறித்து ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காதது குறிப்பிடத்தக்கது.