அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா சஸ்பெண்ட்?

 

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா சஸ்பெண்ட்?

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை இடைநீக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு, அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து குறித்து தமிழக அரசின் அனுமதியின்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது என பல மோதல்கள் அரசுடன் ஏற்பட்ட நிலையில் அவருக்கு எதிராக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா சஸ்பெண்ட்?

இதுகுறித்து பேசிய சூரப்பா, நான் நேர்மையானவன். எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. எனக்கு பல மிரட்டல்கள் வருகின்றன. எதற்கும் நான் பயன்படாததால் என் மீது விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார். இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அப்போது தான் விசாரணை நேர்மையானதாக இருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா சஸ்பெண்ட்?

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக கூறபடுகிறது. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நிலையில் தமிழக அரசு இதுகுறித்து முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன், ஊழல் குறித்த புகார்களை விசாரிக்க உள்ளார். துணை வேந்தர், பதிவாளர் என பலர் இந்த விசாரணை வளையத்திற்குள் வரவுள்ளனர்.

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா சஸ்பெண்ட்?

பதவியில் இருந்து கொண்டு விசாரணையை மேற்கொள்வது சரியாக இருக்காது என கருத்து நிலவுவதால் தமிழக அரசு சூரப்பாவின் சஸ்பெண்ட் குறித்து பரிசீலணையை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.