அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை “டிஸ்மிஸ்” செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை “டிஸ்மிஸ்” செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை உடனே “டிஸ்மிஸ்” செய்ய ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி பரிந்துரைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதற்கான உயர்சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்றும் முக்கிய முடிவை எடுத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதத் துணைவேந்தர் சூரப்பா என்ன மாநிலத்தின் மற்றொரு முதலமைச்சரா?

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை “டிஸ்மிஸ்” செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்

69% இடஒதுக்கீடு குறித்து மத்திய பா.ஜ.க. அரசு எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையிலும், உயர்சிறப்பு அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்!

இதற்கு ரகசிய அனுமதி அளிக்கத்தான் ஆளுநரைச் சந்தித்தாரா முதலமைச்சர் திரு. பழனிசாமி?

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை “டிஸ்மிஸ்” செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்

அண்ணா பல்கலைக் கழகத்தை காவிமயமாக்க முதலமைச்சர் – ஆளுநர் – துணைவேந்தர் கூட்டணியா?

துணைவேந்தர் கடித விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.