அண்ணா பல்கலை. பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு!

 

அண்ணா பல்கலை. பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. இதனையடுத்து பிப்.8ம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு வரும் 15 முதல் 26ம் தேதி வரை நடைபெற்றன. இதனை தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெற்றது.

அண்ணா பல்கலை. பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு!

இந்நிலையில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெற்ற இளநிலை 2,3 இறுதியாண்டு பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகளையும் அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெற்றது.