விடுதி முடியாது… ஆடிட்டோரியம் வேண்டுமானால் தருகிறோம்! – மாநகராட்சிக்கு அண்ணா பல்கலை. பதில்

 

விடுதி முடியாது… ஆடிட்டோரியம் வேண்டுமானால் தருகிறோம்! – மாநகராட்சிக்கு அண்ணா பல்கலை. பதில்

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த, கண்காணிக்க அண்ணா பல்கலைக் கழக விடுதியை அளிக்க முடியாது, அதற்கு பதில் ஆடிட்டோரியத்தை தர தயாராக உள்ளோம் என்று சென்னை அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் கூறியுள்ளார்.
சென்னையில் கொரோனா நோயாளிகள், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் என்று தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்க வைக்க திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரி அறைகள், மாணவர்கள் விடுதிகள் உள்ளிட்டவற்றை சென்னை மாநகராட்சி கையகப்படுத்தி வருகிறது.

விடுதி முடியாது… ஆடிட்டோரியம் வேண்டுமானால் தருகிறோம்! – மாநகராட்சிக்கு அண்ணா பல்கலை. பதில்இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக மாணவர் விடுதியை கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்த ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கு அண்ணா பல்கலைக் கழகம் பதில் அனுப்பியுள்ளது. அதில், அண்ணா பல்கலைக் கழக விடுதியில் மாணவர்கள் உடைமைகள் உள்ளன. எனவே, அவற்றை அப்புறப்படுத்த முடியாது” என்று கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. இந்த நிலையில் பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா இது குறித்து கூறுகையில், “மாணவர் விடுதிக்குப் பதில் பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தை வழங்கத் தயாராக உள்ளோம்” என்றார்.

விடுதி முடியாது… ஆடிட்டோரியம் வேண்டுமானால் தருகிறோம்! – மாநகராட்சிக்கு அண்ணா பல்கலை. பதில்சென்னை மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று தனியார் கல்லூரிகள் எல்லாம் தங்கள் கட்டிடங்களை அரசிடம் ஒப்படைத்து வரும் நிலையில், அரசு பல்கலைக் கழகமே நிராகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.