அண்ணா பல்கலை. பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணை வெளியீடு

 

அண்ணா பல்கலை. பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணை வெளியீடு

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு மற்றும் ஏப்ரல் – மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலை. பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணை வெளியீடு

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைனில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் தோல்வியடைந்தனர். ஆன்லைன் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் தோல்வி என விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழகம், மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் மறுதேர்வு மற்றும் ஏப்ரல் – மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் 21ஆம் தேதி ஆப்லைன் முறையில் தொடங்கவுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. அரியர் மாணவர்களுக்கான தேர்வு 17ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பான விரிவான அட்டவணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.