‘இணைய வழியில் இறுதிப் பருவத்தேர்வு’ செப்.22ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

 

‘இணைய வழியில் இறுதிப் பருவத்தேர்வு’ செப்.22ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

ஆன்லைன் வாயிலாக இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய யுஜிசி எதிர்ப்பு தெரிவித்ததால், இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி, அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மாணவர்களுக்கு இணைய வழியாக தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுமாறும் அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்திருந்தது.

‘இணைய வழியில் இறுதிப் பருவத்தேர்வு’ செப்.22ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

இந்த நிலையில் இணைய வழியில் இறுதிப் பருவத் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக் கழகம், அதன் அதிகாரப்பூர்வமான இணையத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வரும் செப்.22 ஆம் தேதி முதல் செப்.29 ஆம் தேதி வரை இணைய வழியில் தேர்வுகள் நடைபெறும் என்றும் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் மாக் டெஸ்ட் எனப்படும் முன்மாதிரி முறையிலான தேர்வு நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் தேர்வு அட்டவணை பிறகு வெளியிடப்படும் என்றும் லேப்டாப், கணினியில் கேமரா, மைக்ரோ போன் வசதியுடன் இன்டர்நெட் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.