அண்ணா பல்கலைக்கழக விடுதியை ஒப்படைக்க வேண்டும் – ஆணையர் பிரகாஷ்

 

அண்ணா பல்கலைக்கழக விடுதியை ஒப்படைக்க வேண்டும் – ஆணையர் பிரகாஷ்

சென்னையில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிகிச்சை அளிப்பதற்காக குறிப்பிட்ட காலக்கட்டததிற்குள் அண்ணா பல்கலைக்கழக விடுதியை ஒப்படைக்குமாறு மாநகராட்சி ஆணையர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தட்டுப்பாடு நிலவுவதால் அரசு கட்டிடங்கள், பள்ளி கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மருத்துவ முகாம் ஆக மாற்றப்பட்டு வருகின்றன.

அண்ணா பல்கலைக்கழக விடுதியை ஒப்படைக்க வேண்டும் – ஆணையர் பிரகாஷ்

அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக விடுதியை கொடுக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதில், மாணவர்களின் உடைமைகள் அதிகமாக இருப்பதால் தற்போதைக்கு ஒப்படைக்க இயலாது என்று துணை வேந்தர் சூரப்பா கூறியதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் ஒப்படைக்குமாறு மாநகராட்சி சார்பில் பள்ளி, கல்லூரிகள், அரசு கட்டிடங்களுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அதனால் அண்ணா பல்கலைக் கழகத்தை ஒப்படைத்து ஆக வேண்டும் என்று கூறினார். மேலும், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளித்தார்.