கொரோனா வார்டாக மாறும் அண்ணா பல்கலை விடுதிகள்!

 

கொரோனா வார்டாக மாறும் அண்ணா பல்கலை விடுதிகள்!

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அட்மிட்டாகி வருகின்றனர். இதை தவிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் வர்த்தக மையங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை தனிமைப்படுத்தப்படும் வார்டுகளாக மாற்றப்பட்டுவருகின்றன.

கொரோனா வார்டாக மாறும் அண்ணா பல்கலை விடுதிகள்!

இந்நிலையில் சென்னை பல்கலை. வளாகத்தில் உள்ள மாணவர் விடுதிகளில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைக்கப்பட உள்ளதால் விடுதிகளை காலி செய்து 20-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக பல்கலை. பதிவாளர் கருணாமூர்த்திக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடிதம் எழுதியுள்ளார்.இரண்டு நாட்களில் விடுதிகளை ஒப்படைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், மாணவர்கள் வெளியூர்களில் தங்கி இருப்பதால் அவர்களின் உடமைகளை எப்படி அப்புறப்படுத்துவது? என்றும் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அண்ணா பல்கலைக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.