ஏப்ரல் வரை ஆன்லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

 

ஏப்ரல் வரை ஆன்லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் கல்லூரிகளை பொருத்தவரையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று அடுத்த ஆண்டிற்கு செல்வதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் வீடுகளில் முடங்கியுள்ள பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

ஏப்ரல் வரை ஆன்லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

இந்நிலையில் பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏப்ரல் வரை ஆன்-லைன் வழி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5 வகுப்புகள் மட்டுமே நடைபெற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.