வீரதீர செயல்களை புரிந்த 4 பேருக்கு அண்ணா பதக்கம் : முதல்வர் பழனிசாமி வழங்கினார்!

வீரதீர செயல்களை புரிந்த  4 பேருக்கு அண்ணா பதக்கம் : முதல்வர் பழனிசாமி  வழங்கினார்!

தமிழகத்தில் வீரதீர செயல்களை புரிந்த 4 பேருக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

72வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். அப்போது நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனைகளை விளக்கும் வாகன அணிவகுப்பு மெரினா கடற்கரையில் ஊர்வலமாக சென்றது. அத்துடன் குதிரைப்படை, வனத் துறை சிறைத்துறை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.

வீரதீர செயல்களை புரிந்த  4 பேருக்கு அண்ணா பதக்கம் : முதல்வர் பழனிசாமி  வழங்கினார்!

இந்நிலையில் தமிழகத்தில் வீரதீர செயல்களை புரிந்த 4 பேருக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தருமபுரியில் கிணற்றில் விழுந்த யானையை மீட்டு சிறந்த சிகிச்சை வழங்கியமைக்காக கால்நடை மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தை தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கும், நீலகிரியில் காவலர் ஜெயராம் உயிரை காப்பற்றியதற்காக வாகன ஓட்டுநர் புகழேந்திரனுக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் அரசு பள்ளி உதவி ஆசிரியர் முல்லைக்கும் அண்ணா விருது வழங்கப்ட்டது.

வீரதீர செயல்களை புரிந்த  4 பேருக்கு அண்ணா பதக்கம் : முதல்வர் பழனிசாமி  வழங்கினார்!

மத நல்லிணக்கத்தான கோட்டை அமீர் விருது கோயமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஜபாருக்கு வழங்கப்பட்டது. கோவை குனியமுத்தூரில் மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் சிறப்பாக செயல்பட்டதால் கோட்டை அமீர் விருதுடன் ரூ.25ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.