‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தின்’ பெயர் பலகையில் அண்ணாவின் பெயர் சேதம்!

‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தின்’ பெயர் பலகையில் அண்ணாவின் பெயர் சேதம்!

சமுதாயத்தின் ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுவது நூலகங்கள். சென்னையின் முக்கிய அடையாளமாக திகழுவதில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் ஒன்று. மிகவும் புகழ்பெற்ற கன்னிமரா நூலகம் இருந்த போதிலும், இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. இது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கடந்த 2010ம் ஆண்டு செப்.15 தேதி அறிஞர் அண்ணாவின் நினைவாக கட்டப்பட்டது.

‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தின்’ பெயர் பலகையில் அண்ணாவின் பெயர் சேதம்!

இந்த நூலகம் கட்டி 10 ஆண்டுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், 10ஆவது ஆண்டுவிழா அண்மையில் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும், பார்வையற்றவர்களுக்காகவும் பிரத்யேக வசதிகளுடன் அமைந்திருக்கும் இந்த நூலகத்திற்கு தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் மட்டும் சுமார் 1500 பேர் வந்து செல்கின்றார்களாம்.

‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தின்’ பெயர் பலகையில் அண்ணாவின் பெயர் சேதம்!

இவ்வாறு மிக முக்கிய நூலகமாக கருதப்படும் இந்த நூலகத்தின் பெயர் பலகை சேதம் அடைந்திருக்கிறது. ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’ என்ற பெயரில் அ எழுத்து இல்லாமல் ‘ண்ணா நூற்றாண்டு நூலகம்’ என இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது அதிகாரிகள் கவனத்திற்கு சென்று, கூடிய விரைவில் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.