அண்ணா 113வது பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி, வைரமுத்து ட்வீட்!!

 

அண்ணா 113வது பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி, வைரமுத்து ட்வீட்!!

திராவிட கொள்கைகளை சென்னை மாகாணத்தில் வேரூன்ற வைத்து அதை தமிழ்நாடாக மாற்றிய புரட்சியாளர் என்று அண்ணாவின் பிறந்தநாளில் ஈபிஎஸ் நினைவுகூர்ந்துள்ளார்.

அண்ணா 113வது பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி, வைரமுத்து ட்வீட்!!

இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நம் கழகத்தின் முதல் பெயர், திராவிட கொள்கைகளை சென்னை மாகாணத்தில் வேரூன்ற வைத்து அதை தமிழ்நாடாக மாற்றிய புரட்சியாளர், சமூக நீதியை மேடை பேச்சிலிருந்து கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் விதைத்த பேரறிஞர் அவர்களின் 113ஆம் பிறந்த நாளில் “ #அண்ணா நாமம் வாழ்க” என்று வணங்கி போற்றுகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
“மறைந்து
அரைநூற்றாண்டு கடந்தும்
உன்
மைய அச்சில்தான் சுழல்கிறது
மாநில அரசியல்

எல்லா உணவிலும்
தண்ணீரின் சாரமிருப்பதுபோல்
எல்லா நிகழ்விலும்
உன் சாயலிருக்கிறது

இருமொழிக் கொள்கைக்கும்
இனவழி உரிமைக்கும்
நீயே காப்பு

ஆகவே,
ஏடுகளின் உச்சியில் எழுதுகிறோம்
‘ அண்ணா துணை ‘ ” என்று பதிவிட்டுள்ளார்.