அண்ணா பிறந்தநாள்… ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை!

 

அண்ணா பிறந்தநாள்… ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை!

ஈரோடு

அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி, ஈரோட்டில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் முத்துச்சாமி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு பெரியார் வீதியிலுள்ள அண்ணா – பெரியார் நினைவகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணா சிலைக்கு, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன், திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநில விவசாய அணி செயலாளர் எஸ்.எல்.டி சச்சிதானந்தம், முன்னாள் எம்.பி. கந்தசாமி, குறிஞ்சி சிவகுமார், வி.சி.சந்திரகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அண்ணா பிறந்தநாள்… ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை!

தொடர்ந்து, அதிமுக சார்பில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமையில், முன்னாள் மேயரும், மகளிர் அணி செயலாளருமான மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதிமுக சார்பில் கணேச மூர்த்தி எம்.பி. தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முருகன், குழந்தைவேலு, முசிறி சந்திரன், முகமது சாதிக், செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

அண்ணா பிறந்தநாள்… ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை!

இதேபோல், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு, பெருந்துறை அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ-க்கள் டாக்டர் பொன்னுசாமி, கே.எஸ்.பழனிச்சாமி, பொன்னுத்துரை, வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் விஜயன் என்கிற ராமசாமி, பெருந்துறை ஒன்றிய சேர்மன் சாந்தி ஜெயராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.