பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத்தின் தந்தை காலமானார்!

 

பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத்தின் தந்தை காலமானார்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி சம்பத் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத்தின் தந்தை காலமானார்!

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அழுகை, சிரிப்பு, கோபம் என பல முகங்களை வெளிப்படுத்திய அனிதா சம்பத், அந்நிகழ்ச்சியின் 84ஆவது நாளான 27ம் தேதி எவிக்ட் செய்யப்பட்டார். வெளியே வந்த பிறகு, தன்னை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அனிதா சம்பத் வெளியே வந்து ஒரு சில நாட்களே ஆகும் நிலையில், அவரது தந்தை ஆர்.சி சம்பத் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத்தின் தந்தை காலமானார்!

முதன் முதலில் ‘தாய்’ என்னும் வார இதழ் மூலம் தனது பயணத்தை தொடங்கிய ஆர்.சி.சம்பத் உயிரிழக்கும் தருவாய் வரையில் நூற்று கணக்கான புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தமிழில் மிக பிரபலமான வார இதழ் ஒன்றில் அவர் பணி புரிந்து வந்ததாக தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட, அனிதா சம்பத் தனது தந்தையை பற்றி ஒரு டாஸ்க்கின் போது கூறியிருந்தார். அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி சம்பத் அவர்களின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.