• February
    29
    Saturday

Main Area

Mainகனிமொழி அழைப்பை துண்டித்து அவமதிப்பு..? அதிமுகவுக்கு அணி தாவுகிறாரா அனிதா..?

கனிமொழி
கனிமொழி

தி.மு.க. மீதுதான் இப்போது மாற்று கட்சி நிர்வாகிகளின் கண்கள் மொய்க்கின்றன. ‘அடுத்து திமுக ஆட்சிதான். எனவே பெரிய செல்வாக்குடன் சென்றால், சீட் வாங்கி, அமைச்சராகவும் ஆகிடலாம்’ என்பதே பலரது கால்குலேஷனாக இருக்கிறது.Anitha

ஆனால் ஏற்கனவே தி.மு.க.வினுள் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு எம்.எல்.ஏ., தலைமையை கண்டு கொள்ளாமலும், கட்சி நிகழ்ச்சிகலுக்கு  வராமலும், ஒதுங்கியும் ஓரமுமாக இருந்து, என்னவோ கட்சியை விட்டு கழன்று போகிற அளவுக்கு ஸீன் போடுகிறார் எனும் பெயரை வாங்கிக் கட்டியுள்ளார்  அனிதா ராதாகிருஷ்ணன். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா மீதுதான் அக்கட்சியில் இப்போது உட்கட்சி பஞ்சாயத்து.

‘நல்ல ஃபீல்டு ஒர்க்கர். ஏன் விலகிட்டார்?’ என்று ஜெ.,வே வருத்தம் காட்டுமளவுக்கான அரசியல்வாதி அனிதா ராதாகிருஷ்ணன். அவரது அவையில் அமைச்சராக இருந்து அதிரடி காட்டியவர், பிறகான சில மனஸ்தாபங்களால் அங்கிருந்து பிரிந்து தி.மு.க.வில் ஐக்கியமானார். அக்கட்சியில் தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவருக்காக மாவட்டமே இரண்டாய் பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளராகவும் ஆக்கியுள்ளனர். ஆனாலும் அவருக்கு மன நிறைவில்லை.

Kanimozhi

கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என  உழைத்து தி.மு.க.வுக்கு தோள் கொடுத்த அனிதாவை கடந்த சில மாதங்களாக களத்தில் காண முடியவில்லை. வேலூர் தேர்தல் பணிக்காக அறிவாலயத்திலிருந்து அனிதாவை அழைத்திருக்கின்றனர். ஆனால் போனை எடுக்கவில்லை. மாவட்ட செயலாளர்களிடம் ஸ்டாலின் பேசும் லைனிலிருந்தும் அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. எடுக்கவில்லை.

தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி.யான கனிமொழி அங்கே தான் கலந்து கொள்ளும் நிகழ்வு குறித்து அறிக்கை கொடுத்திட அனிதாவை போனில் தொடர்பு கொண்டாராம். அந்த அழைப்பையும் ஏற்கவில்லையாம்.
இப்படி கட்சியிலிருந்து வெகுதூரம் அவர் நழுவிச் செல்வதை பார்த்துவிட்டு கழக நிர்வாகிகள் பரபரப்பாக பலவிதங்களில் பேச துவங்கிவிட்டனர். சிலர் “நம்ம கட்சி எதிர்க்கட்சியாதான் இருக்குது. ஆளுங்கட்சியா இருந்தால் அவருக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும். இந்த யதார்த்தம் புரிஞ்சிருந்தும் சின்னக் குழந்தை மாதிரி கோபப்பட்டுட்டு ஓரமா உட்கார்ந்திருக்காரு அண்ணாச்சி.

அதுமட்டுமில்ல, போன வருஷம் எல்லா மாவட்ட செயலாளர்களிடமும் ஒரு தொகையை கட்சி செலவுக்காக தலைமை கேட்டுச்சு. எல்லாரும் கொடுக்க, அனிதாவும் கொடுத்தார். ஆனால் கொஞ்ச நாள் கழிச்சு அந்த தொகையை திருப்பித் தரும்படி கேட்டு நச்சரிச்சிருக்கிறார். இதனால் தலைமை டென்ஷனாகி விட்டது.
அதேமாதிரி போல மக்களவை தேர்தலில் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டபோது தேர்தல் பிரசாரத்துக்காக அவங்க செய்த செலவுகளை ஏதோ தானே தன் கைகாசை போட்டு பண்ணுன மாதிரியும் அண்ணாச்சி பேசிட்டு இருந்திருக்கார். இதெல்லாம் கனிமொழியம்மாவுக்கு தெரிஞ்சும், அவங்க பெருசா கண்டுக்காம விட்டுட்டாங்க.

இந்த நிலையில லோக்சபா, இடைத்தேர்தல்ன்னு நல்ல உழைச்ச தனக்கு கட்சியில் பெரிய பதவி எதுவுமே கிடைக்கலைன்னு கோவப்படுகிறாராம். அட எந்த மாவட்ட செயலாளருக்குத்தான் புதுப்பதவி கிடைச்சிருக்குது? இவருக்கு மட்டுமா கொடுக்காம இருக்கிறாங்க. இந்த யதார்த்தமெல்லாம் புரிஞ்சிருந்தும் கூட மனுஷன் இப்படி தலைவர் போனையும், கனியம்மா போனையும் அட்டெண்ட் பண்ணாம இருக்குறது தப்பாச்சே அண்ணாச்சி.” என்று புலம்புகின்றனர்.anitha

ஆனால் அனிதாராதாகிருஷ்ணனின் தரப்பினரோ ‘அவருக்கு முதுகு வலி. அதுக்கு சிகிச்சை எடுத்துட்டு, ரெஸ்ட்ல இருக்கிறார். வேலூரில் பிரசாரத்துக்கு அண்ணாச்சி வரலைதான். ஆனால், இருபத்துநாலு பூத்களில் அவருடை ஆட்கள் வேலை பார்த்தோம். அதனால எந்த மன வருத்தமும் இல்லை. சிலர் கிளப்புற மாதிரி பண விவகாரமெல்லாம் இல்லவேயில்லை. கனிமொழி அக்கா பணத்தையெல்லாம் ஒரு காலத்திலும் அவர் தன் பணமென்று சொன்னதேயில்லை. அண்ணாச்சி தன் உடம்பை சரிபண்ணிட்டு மறுபடியும் வருவார்.” என்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.