“ஹலோ உங்க பொண்டாட்டிய கொஞ்சம் அனுப்பி வைக்கிறீங்களா?”-நள்ளிரவில் பிரபுவுக்கு வந்த போன் -தொழிலாளி செய்த தகிடுதத்தம்…

 

“ஹலோ உங்க பொண்டாட்டிய கொஞ்சம் அனுப்பி வைக்கிறீங்களா?”-நள்ளிரவில் பிரபுவுக்கு வந்த போன் -தொழிலாளி செய்த தகிடுதத்தம்…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கல்மனே டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஜோஷி என்பவர் பல வருடம் வேலை பார்த்து வந்துள்ளார் .பிறகு அந்த நிறுவனத்திலிருந்த சமீபத்தில் வேலையை விட்டு விலகி வந்துள்ளார் .அதனால் ஜோஷி, தான் வேலை பார்த்த காலத்தில் தன்னுடைய அக்கௌண்டில் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு தொகையை வாங்க விரும்பினார் .

“ஹலோ உங்க பொண்டாட்டிய கொஞ்சம் அனுப்பி வைக்கிறீங்களா?”-நள்ளிரவில் பிரபுவுக்கு வந்த போன் -தொழிலாளி செய்த தகிடுதத்தம்…
அதற்காக அந்த கம்பெனியின் இயக்குனர் அவினாஷ் பிரபுவை பலமுறை போனில் தொடர்பு கொண்டு அந்த பிடித்தம் செய்த பணத்தை கேட்டுள்ளார் ,ஆனால் அந்த நிறுவன முதலாளி பிரபு தான் கொரானா காரணமாக கம்பெனியை மூடிவிட்டதாகவும் ,பழைய மேனேஜர் தங்களின் டாக்குமென்டுகளை கொடுக்காமல் போய் விட்டார் என்று கூறி போனை வைத்து விட்டார் .இதனால் கோபமுற்ற ஜோஷி ஒரு ஆபாச வெப்சைட்டில் தன்னுடைய முதலாளி மற்றும் அவர் மனைவி மற்றும் குடும்பத்தினர் போன் நம்பர்களை வெளியிட்டுள்ளார் ,மேலும் பல பாலியல் பொம்மைகளையும் தன்னுடைய முதலாளி பிரபுக்கு ஆர்டர் செய்துள்ளார் .
இதனால் பிரபுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் பல தெரியாத நம்பர்களிலிருந்து நிறைய போன் கால்கள் வந்துள்ளன ,அதனால் கோபமுற்ற அவர் இந்த வேலைகளை செய்த தன்னுடைய தொழிலாளி ஜோஷியின்
மீது செவ்வாய்க்கிழமை மத்திய சிஇஎன் குற்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஜோஷி மீது வழக்கை பதிவு செய்து ,அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர் .மேலும் பிரபு சொன்ன வெப்சைட்டுகளில் ஆராய்ந்து வருகிறார்கள் .

“ஹலோ உங்க பொண்டாட்டிய கொஞ்சம் அனுப்பி வைக்கிறீங்களா?”-நள்ளிரவில் பிரபுவுக்கு வந்த போன் -தொழிலாளி செய்த தகிடுதத்தம்…