தன்னுடைய மனைவி தொடர்ந்து பெண் குழந்தையாக பெற்றதால் ஒரு கணவன் அவரை விவகாரத்து செய்ததால் அவர் போலீசில் புகார் கொடுத்தார்.
![Man booked for giving triple talaq to wife in MP [Representative image]](https://imgk.timesnownews.com/story/iStock-844455460_1_0.jpg?tr=w-600,h-450,fo-auto)
மத்தியபிரதேச மாநிலம் போபாலின் ஷாஜெஹானாபாத் பகுதியில் முகமது ஒசாமா என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்தார் .அந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் .இந்நிலையில் அந்த பெண் மீண்டும் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார் .அதனால் மிகவும் மனமுடைந்தார் அந்த பெண்ணின் கணவர் .ஆண் குழந்தை இல்லாத காரணத்தால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது .
அதனால் கடந்த வாரம் அந்த கணவன் திடீரன்று அந்த பெண்ணுக்கு மூன்று முறை தலாக் சொல்லிவிட்டு இஸ்லாம் மத முறைப்படி விவகாரத்து செய்தார் .அதன் பிறகு வேறு ஒரு பெண்ணோடு கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் .இந்த தலாக் விவகாரத்தில் அவரின் தந்தைக்கும் தொடர்பு உள்ளது .
இந்த தலாக் விவகாரத்தால் அந்த பெண் மிகவும் மன வேதனையடைந்தார் .அதனால் தன்னுடைய கணவனின் இந்த விவாகரத்து செல்லாது என்று அறிவிக்க கோரியும் ,மீண்டும் தன்னுடைய கணவனை தன்னோடு சேர்த்து வைக்க கோரியும் அந்த பெண் போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரையும் அவரின் தந்தையாரையும் காவல் நிலையத்திற்கு கூட்டி வந்து விசாரித்தார்கள் .அதன் பிறகு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமை மீதான பாதுகாப்பு) சட்டம், 2019 இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.மேலும் அவரது தந்தை-மகன் இருவரும் வெள்ளிக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
