darbar
  • January
    24
    Friday

Main Area

Main



காவலுக்கு இருந்த நாய்க்கு மயக்க மருந்து : 130 சவரன் நகைகளை ஆட்டையைப் போட்ட கொள்ளையர்கள்!

Dog
Dog

கோவை, இடையர்பாளையம் அப்பாஸ் கார்டனை சேர்ந்த கான்டிராக்டர் கனகராஜ், இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கனகராஜ் நேற்று மாலை தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கோவிலுக்குச் சென்றுள்ளார்.

Jewels

வீட்டைப் பூட்டி விட்டுச் சென்ற கனகராஜ், வீடு திரும்பும் போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் வீட்டின் வெளியே கட்டிப் போடப்பட்டிருந்த நாயும் மயக்க நிலையில் படுத்திருந்துள்ளது. 

dog

வீட்டின் உள்ளே சென்ற கனகராஜ் வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 130 சவரன் தங்க நகைகள், 15 லட்சம் பணம், உள்ளிட்டவை காணாமல் போகியுள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, அவரின் வீட்டிலுள்ள சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டிருந்துள்ளது.

camera

மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கனகராஜ் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். பட்ட பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.