இனி உங்க ஸ்மார்ட்போன் வேற லெவல்ல மாற போகுது… ஆண்ட்ராய்டு வெர்சன் 12-ஐ வெளியிட்டு அதகளப்படுத்திய கூகுள்!

இனி உங்க ஸ்மார்ட்போன் வேற லெவல்ல மாற போகுது… ஆண்ட்ராய்டு வெர்சன் 12-ஐ வெளியிட்டு அதகளப்படுத்திய கூகுள்!

ஸ்மார்ட்போன்கள் அதிகரிக்கும் அதே வேகத்தில் தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள புதுப்புது ஆண்ட்ராய்டு OS (இயங்குதளம்) அப்டேட்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு அப்டேட்டிலும் புதுப்புது அம்சங்களை வெளியிட்டு பயனர்களை ஆச்சர்யப்படுத்தும். இந்த அப்டேட்களால் தான் இன்றளவும் ஆண்ட்ராய்டு போன்களில் அசைக்க முடியாத சக்தியாக கூகுள் நிறுவனம் இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சறுக்கலானதும் இந்த அப்டேட்களை வெளியிட முடியாமல் போனததால் தான். ஆனால் கணிணி இயங்குதளத்தில் ஆப்பிளை தவிர்த்து மைக்ரோசாப்ட்டை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.

இனி உங்க ஸ்மார்ட்போன் வேற லெவல்ல மாற போகுது… ஆண்ட்ராய்டு வெர்சன் 12-ஐ வெளியிட்டு அதகளப்படுத்திய கூகுள்!

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ஸ்வீட்டாக பெயர் சூட்டும். உதாரணத்திற்கு ஆண்ட்ராய்டு வெர்சன்களான 4,5,6 ஆகியவற்றுக்கு முறையே ஜெல்லிபீன், கிட்கேட், லாலிபாப். மார்ஸ்மாலோ என்று பெயர் சூட்டி பயனர்களுக்கு தித்திப்பூட்டியது. ஆண்ட்ராய்டு வெர்சன் 9 வரை தொடர்ந்த இம்முறையானது கைவிடப்பட்டது. தற்போது வெர்சன் 12-ஐ வெளியிட்டிருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் வருடாந்திர தொழில்நுட்ப நிகழ்வு நேற்று முன்தினம் தொடங்கி இன்றோடு முடிவடைகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை கூகுள் வெளியிட்டது.

இனி உங்க ஸ்மார்ட்போன் வேற லெவல்ல மாற போகுது… ஆண்ட்ராய்டு வெர்சன் 12-ஐ வெளியிட்டு அதகளப்படுத்திய கூகுள்!
source:AH

அதில் அனைவரையும் ஈர்த்தது என்னவோ ஆண்ட்ராய்டு வெர்சன் 12 தான். இதில் ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும்போது பயனர்களுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் user interface-ஐ மாற்றியிருப்பதே இதற்கான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. புதிய வண்ணங்கள், புதிய விட்ஜெட்கள் (widget), வால்பேப்பர்கள், லாக் ஸ்கீரின் கிராப்பிக்ஸில் கடிகாரத்தின் அளவு என அதகளப்படுத்தியுள்ளது இந்த புதிய அப்டேட்.

இனி உங்க ஸ்மார்ட்போன் வேற லெவல்ல மாற போகுது… ஆண்ட்ராய்டு வெர்சன் 12-ஐ வெளியிட்டு அதகளப்படுத்திய கூகுள்!

நோட்டிபிக்கேஷன்கள், காலநிலை மாற்றம் (weather), அலாரம் என அனைத்தையும் லாக் ஸ்கீரினின் மேல் இடப்புறம் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் பயனர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் கூகுளின் முயற்சி நிச்சயம் பாராட்டத்தக்கது. notification tray-இல் மிகச்சிறிய அளவில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதன்படி போன் டிஸ்ப்ளேயில் மேலிருந்து கீழ் இழுக்கும்போது வரும் நோட்டிபிக்கேஷனில் வரும் ஐகான்களின் வடிவத்தில் சிறு மாற்றத்தையும், அதில் சில வண்ணங்களையும் இட்டு நிரப்பி பயனர்களுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்க கூகுள் அப்டேட்டை கொடுத்துள்ளது. குறிப்பாக நோட்டிபிகேஷனை கவனிக்க தவறினால், அது கடிகாரம் அருகில் தனித்துவமான முறையில் காண்பிக்கப்படும் அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது.

இனி உங்க ஸ்மார்ட்போன் வேற லெவல்ல மாற போகுது… ஆண்ட்ராய்டு வெர்சன் 12-ஐ வெளியிட்டு அதகளப்படுத்திய கூகுள்!

iOS14 இயங்குதளத்துக்குப் போட்டியாக privacy indicator-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். உதாரணமாக உங்களது போனில் கேமராவோ, மைக்ரோபோனோ பயன்படுத்தப்படுகிறதா என்பதை டிஸ்ப்ளேயில் இந்த இன்டிகேட்டர் லைட் எரியும்போது தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு நோட்டிபிக்கேஷன்கள் வரும்போது பார்த்தால் இந்த லைட் எரிவதைக் காணலாம். இதேபோல ஐபோனில் சைடில் இருக்கும் பவர் பட்டனை தொடர்ந்து அழுத்தினால் சிரி ஓபனாகும். இதற்குப் போட்டியாக ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சத்தை ஏற்பத்தும் வகையில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட்டில் கூகுள் அளித்துள்ளது.

இனி உங்க ஸ்மார்ட்போன் வேற லெவல்ல மாற போகுது… ஆண்ட்ராய்டு வெர்சன் 12-ஐ வெளியிட்டு அதகளப்படுத்திய கூகுள்!

ஸ்மார்ட்போன்களில் நீண்ட நாளாக இருக்கும் ஹேங்கிங் பிரச்சினையை சரிசெய்ய கூகுள் முன்வந்துள்ளது. அதனை வெர்சன் 12இல் கொடுத்திருக்கிறது. முன்னமே சொன்னதுபோல் user interface மாற்றம் தான் இதற்கும் காரணம். செயலிகளின் ஐகான்கள் வட்ட வடிவமானதாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல அடுத்தடுத்த டேப்களை மிக வேகமாக நகர்த்தும் வகையில் சிபியூவை மேம்படுத்தும் அம்சத்தையும் இணைத்துள்ளது. அதேபோல அனைத்து ஆண்ட்ராய்டு டிவிக்களுக்கும் ரிமோட்டாக உங்களது ஸ்மார்ட்போன் செயல்படும் வகையிலும் புதிய அம்சத்தை கூகுள் அளித்திருக்கிறது.

இனி உங்க ஸ்மார்ட்போன் வேற லெவல்ல மாற போகுது… ஆண்ட்ராய்டு வெர்சன் 12-ஐ வெளியிட்டு அதகளப்படுத்திய கூகுள்!

இந்தப் புதிய ஆண்ட்ராய்டு வெர்சன் கூகுளின் ஸ்மார்போன்களான Google Pixel 3, Pixel 3 XL, Pixel 3A, Pixel 3A XL, Pixel 4, Pixel 4 XL, Pixel 4A, Pixel 4A 5G, and the Pixel 5 ஆகியவற்றில் இன்ஸ்டால் செய்துகொள்ளாலாம். அதேபோல மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களில் ஒருசிலவற்றில் மட்டுமே இதனை இன்ஸ்டால் செய்ய முடியும். Asus ZenFone 8, OnePlus 9, OnePlus 9 Pro, Oppo Find X3 Pro, TCL 20 Pro 5G, Tecno Camon 17, iQoo 7 Legend, Mi 11, Mi 11 Ultra, Mi 11i, Mi 11X Pro, Realme GT, and the ZTE Axon 30 Ultra 5G ஆகிய ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் இடம்பெறும். இனி புதிதாக வெளிவரவிருக்கும் அனைத்து போன்களிலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.