திமுக எம்எல்ஏ மகாராஜன் கார் மீது மினிலாரி மோதல் – காயமின்றி தப்பினார்!

 

திமுக எம்எல்ஏ மகாராஜன் கார் மீது மினிலாரி மோதல் – காயமின்றி தப்பினார்!

திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே ஆண்டிபட்டி தொகுதி திமுக எம்எல்ஏ மகாராஜன் சென்ற கார் மீது, மினிலாரி மோதி விபத்திற்குள்ளானது. இதில், அவர் காயமின்றி தப்பினார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மகாராஜன். இவர் நேற்று பிற்பகல் 1 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே காரில் சென்று கொண்டிருந்தார். வத்தலகுண்டு புறவழிச் சாலையில் சென்றபோது மகாராஜனின் கார் மீது, எதிரே வாழைக்காய் ஏற்றிவந்த மினிலாரி மோதி விபத்திற்கு உள்ளனாது.

திமுக எம்எல்ஏ மகாராஜன் கார் மீது மினிலாரி மோதல் – காயமின்றி தப்பினார்!

இந்த விபத்தில் எம்எல்ஏ மகாராஜன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். அவரது காரின் முன்பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. இதேபோல, மினிலாரியில் வந்த 5 பெண் தொழிலாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த வத்தலகுண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திமுக எம்எல்ஏ கார் விபத்தில் சிக்கிய சம்பவம் வத்தலகுண்டில் பரபரபபை ஏற்படுத்தியது.