ஆந்திராவில் வரும் 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு

 

ஆந்திராவில் வரும் 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு

ஆந்திர மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி ஆந்திரப் பிரதேசத்தில் ஊரடங்கு தளர்வின்படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க பள்ளிகளுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒன்றாம் தேதி ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் திறக்கப்பட்ட 4 நாட்களிலேயே 27 அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது ஆசிரியர்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனால் அம்மாவட்ட கல்வி அதிகாரி நாகமணி, அரசு பள்ளிகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார் . மீண்டும் நிலைமை சீரடைந்ததும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆந்திராவில் வரும் 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு

இந்நிலையில் ஆந்திராவில் நவம்பர் 2 ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்று காணொலி வாயிலாக உரையாற்றிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. நவம்பர் 2ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கும். நவம்பர் 23ம் தேதி 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.