ஆந்திராவில் டபுளாக உயரும் மாவட்டங்கள் எண்ணிக்கை! – ஜெகன் அதிரடி

 

ஆந்திராவில் டபுளாக உயரும் மாவட்டங்கள் எண்ணிக்கை! – ஜெகன் அதிரடி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 13 மாவட்டங்களை 25 மாவட்டங்களாக பிரிப்பதற்கான முடிவை ஜெகன் மோகன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் எடுத்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ளன. கடலோர ஆந்திராவில் 9 மாவட்டங்களும், ராயல்சீமா பகுதியில் நான்கு மாவட்டங்களும் உள்ளன.

ஆந்திராவில் டபுளாக உயரும் மாவட்டங்கள் எண்ணிக்கை! – ஜெகன் அதிரடிஇதில் அனந்தபூர் மாவட்டம் மிகப்பெரியதாக உள்ளது. ஶ்ரீகாகுளம் மாவட்டம் மிகச் சிறியதாக உள்ளது. ஆந்திராவில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆந்திராவில் டபுளாக உயரும் மாவட்டங்கள் எண்ணிக்கை! – ஜெகன் அதிரடிஇந்த நிலையில் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில் ஆந்திராவில் தற்போதுள்ள 13 மாவட்டங்களைப் பிரித்து கூடுதலாக 12 மாவட்டங்களை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தலைமைச் செயலாளர் நீலம் ஸ்வாஹானி தலைமையில் குழு அமைப்பது என்றும்; அந்த குழுவில் நில நிர்வாகத் துறை தலைமை ஆணையர், பொது நிர்வாகம், வருவாய்த் துறை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.