கொரோனாவுக்கு மத்தியில் ஆந்திராவில பள்ளிகள் வருகிற 13ம் தேதி முதல் திறப்பு! – பெற்றோர் அதிர்ச்சி

 

கொரோனாவுக்கு மத்தியில் ஆந்திராவில பள்ளிகள் வருகிற 13ம் தேதி முதல் திறப்பு! – பெற்றோர் அதிர்ச்சி

ஆந்திரப் பிரதேசத்தில் வருகிற 13ம் தேதி முதல் பள்ளிகள் பகுதி நேரமாக திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆந்திராவில் தற்போது கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினமும் 100, 200 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1000ஐ நெருங்கிவிட்டது. இந்த நிலையில் நாடு முழுக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், முந்தைய பருவத் தேர்வுகளை நடத்த முடியாத நிலையில், இறுதியாண்டு தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் ஆந்திராவில் வருகிற 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவுக்கு மத்தியில் ஆந்திராவில பள்ளிகள் வருகிற 13ம் தேதி முதல் திறப்பு! – பெற்றோர் அதிர்ச்சி

முழு நேர வகுப்பாக இருக்காது. ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரு நாளும், நடுநிலை மற்றும் உயர் நிலைப் பள்ளியில் படிப்பவர்களுக்கு வாரத்துக்கு இரண்டு நாட்களும் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில் இந்த இடைப்பட்ட நேர பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மத்தியில் ஆந்திராவில பள்ளிகள் வருகிற 13ம் தேதி முதல் திறப்பு! – பெற்றோர் அதிர்ச்சி
பள்ளிகள் திறக்கப்படும் அதே நாளில் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை, பெல்ட், ஷூ, சாக்ஸ் ஆகியவை வழங்கப்படும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கிவைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுக்க பள்ளிகள் திறப்பது பற்றி ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு ஆய்வு செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியா கூறியிருந்தார். ஆந்திரப் பிரதேசத்திலும் ஆகஸ்ட் 3ம் தேதி வரை பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பகுதிநேர பள்ளிகள் திறக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா கட்டுக்குள் கொண்டு வந்த பிறகே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பெற்றோர், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.