ஆந்திராவில் பால் விநியோக வண்டியில் மது பாட்டில்கள் கடத்தல்….. டிரைவர் உள்பட 3 பேர் கைது..

ஆந்திராவில் பால் விநியோக வண்டியில் மது பாட்டில்கள் கடத்தல்….. டிரைவர் உள்பட 3 பேர் கைது..

லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்படாத நேரத்தில், மது கடைகள் மூடப்பட்டு இருந்ததால் சட்டவிரோதமாக பல புதுமையான வழிமுறைகளில் மதுபானங்களை கடத்தும் சம்பவங்கள் அரங்கேறியது. தற்போது நாடு முழுவதும் மது கடைகள் திறக்கப்பட்டு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்திலும் மது பாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

ஆந்திராவில் பால் விநியோக வண்டியில் மது பாட்டில்கள் கடத்தல்….. டிரைவர் உள்பட 3 பேர் கைது..

ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் நேற்று பால் விநியோக வண்டியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்திய டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வண்டியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வுய்யுறு நகர காவல் நிலைய துணை ஆய்வாளர் இது குறித்து கூறியதாவது: அவனிகடாவிலிருந்து விஜயவாடா நோக்கி பால் விநியோக வண்டி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

ஆந்திராவில் பால் விநியோக வண்டியில் மது பாட்டில்கள் கடத்தல்….. டிரைவர் உள்பட 3 பேர் கைது..

நேற்று நண்பகல் 12.30 மணி அளவில் வுய்யுறு நகரின் கண்டிகுண்டா சென்டர் அருகே அந்த பால் விநியோக வண்டி வந்தபோது அதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வண்டிக்குள் 180 மி.லி. அளவு கொண்ட 50 மது பாட்டில்கள் மற்றும் 5 புல்பாட்டில்கள் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.18,500. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வண்டியின் டிரைவர் எம்.விகாஸ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.