3 தலைநகரங்களுக்கு எதிர்ப்பு.. விவசாயிகளின் போராட்டத்தில் அரசு மிகவும் மோசமாக நடக்கிறது.. சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..

3 தலைநகரங்களுக்கு எதிர்ப்பு..  விவசாயிகளின் போராட்டத்தில் அரசு மிகவும் மோசமாக நடக்கிறது.. சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..

ஆந்திர பிரதேசம் பிரிவினைக்கு பிறகு தெலங்கானா, ஆந்திரா என இரண்டானது. ஆந்திர மாநிலத்துக்கு கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதியை தலைநகராக அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு அறிவித்தார். மேலும் அங்கு அதற்கான வசதிகள் உருவாக்குவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களை அரசு வாங்கியது. மேலும் பிரம்மாண்டமான சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

3 தலைநகரங்களுக்கு எதிர்ப்பு..  விவசாயிகளின் போராட்டத்தில் அரசு மிகவும் மோசமாக நடக்கிறது.. சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, நிர்வாக வசதிக்காக அமராவதியோடு, விசாகப்பட்டிணம், கானூலையும் சேர்த்து மாநிலத்தில் மொத்தம் 3 தலைநகரங்களை அமைக்க முடிவு செய்தது. இதனை தெலுங்கு தேசம் கட்சியும், அமராவதியில் தலைநகர் அமைவதற்காக இடம் கொடுத்த விவசாயிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 3 தலைநகர் அமைக்கும் முடிவை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக 29 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

3 தலைநகரங்களுக்கு எதிர்ப்பு..  விவசாயிகளின் போராட்டத்தில் அரசு மிகவும் மோசமாக நடக்கிறது.. சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..

நேற்று விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் 200வது நாளாகும். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறுகையில், இன்று (நேற்று) ஆந்திர பிரதேச தலைநகரை பரவலாக்கத்துக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தின் 200வது நாள். காவல் துறை மற்றும் அரசு மிகவும் மோசமாக நடந்து கொள்கிறது. இருப்பினும் எங்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்திய மக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார். கிராமத்து மக்கள் கூறுகையில், மாநில தலைநகருக்காவும், எங்களது அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்துக்காவும் எங்களது வளமான 34 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தியாகம் செய்தோம். தலைநகர் பரவலாக்கப்பட்டால் எங்களது எதிர்வரும் தலைமுறையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என தெரிவித்தனர்.