ஆந்திராவில் போலீஸ் நிலையத்தை பார் ஆக மாற்றிய காவலர்கள் சஸ்பெண்டு!

 

ஆந்திராவில் போலீஸ் நிலையத்தை பார் ஆக மாற்றிய காவலர்கள் சஸ்பெண்டு!

ஆந்திரப் பிரதேசத்தில் காவல் நிலையத்தில் மது அருந்திய மூன்று போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசம் இந்துபூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் மூன்று  காவலர்கள், காவல் நிலையத்திலேயே மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் சட்டவிரோதமாக மது, மணல், போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க சிறப்புப் பிரிவை ஏற்படுத்தி வருகிறது. அப்படி பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் காவல் நிலையங்களில் விசாரணை முடியும் வரை பத்திரப்படுத்தப்படுவது வழக்கம்.

ஆந்திராவில் போலீஸ் நிலையத்தை பார் ஆக மாற்றிய காவலர்கள் சஸ்பெண்டு!

அனந்தபுரம் மாவட்டம் இந்துபூர் காவல் நிலையத்தில் இப்படி பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டிலை எடுத்து மூன்று காவலர்கள் மது அருந்தியுள்ளனர். இதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், மூன்று பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆந்திராவில் போலீஸ் நிலையத்தை பார் ஆக மாற்றிய காவலர்கள் சஸ்பெண்டு!
இது குறித்து இந்துபூர் இன்ஸ்பெக்டர் மன்சூரிதின் கூறுகையில், “மூன்று போலீசார் மது அருந்தியது உண்மைதான். இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது எப்போது நடந்தது என்று கண்டறிய முடியவில்லை. மது அருந்திய திருமலேஷ், கோபால் மற்றும் நூர் அகமது ஆகிய மூன்று காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.