சொந்த மகள்களை சொம்பால் அடித்து… சூலத்தால் வயிற்றை கிழித்து… ஆந்திராவை நடுங்க வைத்த நரபலி !

 

சொந்த மகள்களை சொம்பால் அடித்து… சூலத்தால் வயிற்றை கிழித்து… ஆந்திராவை நடுங்க வைத்த நரபலி !

ஆந்திர மாநிலம் சித்தூரில் சொந்த மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் இந்தியாவேயே அதிர செய்திருக்கிறது. இதை அரங்கேற்றியது ஒரு கல்லூரியின் துணை முதல்வராக இருக்கும் தந்தையும், பேராசிரியராக இருக்கும் தாயும் என்பது தான் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

கைது செய்யப்பட்ட பின் இருவரும் தங்கள் மகள்கள் உயிர்த்தெழுவார்கள்; அவர்கள் இறக்கவில்லை, உறங்குகிறார்கள் என்று கூறியது காவல் துறையினரேயே ஒரு நொடி கலங்கடித்தது. பேருக்கு பின்னால் பல பட்ட படிப்புகளின் டிகிரிகளை போட்டுக்கொண்டவர்கள் மூட நம்பிக்கையால் இரு மகள்களை அநியாயமாக பலி கொடுத்திருக்கிறார்கள்.

சொந்த மகள்களை சொம்பால் அடித்து… சூலத்தால் வயிற்றை கிழித்து… ஆந்திராவை நடுங்க வைத்த நரபலி !

படிக்காத பாமரன் கூட தனது குழந்தைக்கு காய்ச்சல் என்றால் கடவுளை நம்பாமல் மருத்துவமனைக்கு ஓடி செல்கிறான். ஆனால் இவர்களோ படித்த படிப்பிற்கே அர்த்தமற்ற ஒரு காரியத்தை செய்திருக்கிறார்கள்.விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர்கள் கூறிவருவதாகவும் விவரிக்கின்றனர் காவல் துறையினர்.

குற்றவாளியான புருசோத்தமன் மதனப்பள்ளியில் இருக்கும் ஒரு கல்லூரியில் பணியாற்றிவருவதால், ஒரு வருடத்திற்கு முன் அங்கேயே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். அப்போதிருந்தே அவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் சரியாக பேசாமலும், அன்னந்தண்ணி புழங்காமலும் இருந்துவந்துள்ளனர்.

சொந்த மகள்களை சொம்பால் அடித்து… சூலத்தால் வயிற்றை கிழித்து… ஆந்திராவை நடுங்க வைத்த நரபலி !

மர்மமான முறையிலேயே தான் இந்தக் குடும்பம் அப்பகுதியில் இயங்கிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நள்ளிரவில் பூஜைகள் நடக்கும் சத்தம் அடிக்கடி கேட்பதாகவும் அப்பகுதியினர் விவரிக்கின்றனர். இந்த பூஜைகளுக்கு கொலையுண்டவர்களான அலெக்யாவும் (27), சாய் திவ்யாவும் (22) ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன் சாய் திவ்யா வீட்டு மாடியிலிருந்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், அதனை பெற்றோர்கள் தடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் அவரின் பேஸ்புக் பதிவுகள் அனைத்தும் யாருக்கும் புரியாத புதிராகவே இருந்திருக்கிறது.

இவையனைத்தையும் பார்க்கையில் கொலையுண்ட இருவருக்குமே இந்த நரபலி பூஜை குறித்த தகவல் முன்னமே தெரிந்திருக்கலாம். அவர்களின் சம்மதத்தின் பெயரில் தான் அரங்கேறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இருவரையும் சொம்பால் அடித்து சூலாயுதத்தால் வயிற்றைக் கிழித்து கொலை செய்யப்பட்டிருப்பதால், இது நரபலி தான் என்று அடித்து கூறுகின்றனர் விசயம் அறிந்தவர்கள்.

சொந்த மகள்களை சொம்பால் அடித்து… சூலத்தால் வயிற்றை கிழித்து… ஆந்திராவை நடுங்க வைத்த நரபலி !

இந்நிலையில், விசாரணையின்போது புருசோத்தமனும் பத்மஜாவும் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் வெளியாகியிருக்கிறது. அதில், “இரண்டு மகள்கள் உள்பட நாங்கள் ஆன்மீகத்தை நம்புபவர்கள். கடந்த ஒரு வாரம் முழுவதுமே நாங்கள் ஆன்மீக பூஜைகளை மேற்கொண்டு வந்தோம். இதற்கு முன்பும் நாங்கள் இதேபோல பூஜைகள் செய்திருக்கிறோம். அதன் பலனையும் நாங்கள் அடைந்திருக்கிறோம். உங்கள் மாதிரியான சாதாரண மக்களுக்கு அது புரியாது.

எங்கள் மகள்களின் தலைகளை அடித்து உடைத்த பிறகும் அவர்கள் ஒரு மணி நேரம் உயிரோடு இருந்தார்கள். இதன்மூலம் எங்களின் பூஜைக்கான பலன் கிடைத்ததாக நாங்கள் உணர்ந்தோம். கடவுளிடம் கிடைத்த செய்தியால் தான் இந்த பூஜையை செய்தோம். இளைய மகள் சாய் திவ்யாவுக்கு சத்யா யுகம் வரப் போவதாக கடவுளிடமிருந்து செய்தி வந்தது” என்று இருவரும் கூறியிருக்கிறார்கள்.

இந்த வாக்குமூலத்தையும் அலெக்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் பார்க்கையில் இந்த பூஜையில் முழு சம்மதத்துடன் தனது உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது ஊர்ஜிதமாகிறது. ஜனவரி 21ஆம் தேதி அவர், “சிவா வருகிறார் (siva is coming)” என்று பதிவிட்டிருப்பது கவனித்தக்கது.

சொந்த மகள்களை சொம்பால் அடித்து… சூலத்தால் வயிற்றை கிழித்து… ஆந்திராவை நடுங்க வைத்த நரபலி !

முதற்கட்ட விசாரணையில் நல்ல மனநிலையில் பதில் சொன்ன பத்மஜா, தற்போது ஏதேதோ உளறி கொட்டுவதாக காவல் துறையினர் கூறுகின்றனர். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது, தன்னை சிவனுடைய மறு அவதாரம் என்றும், கொரோனாவுக்கு மருந்தே வேண்டாம் என்றும் உலக விவகாரங்களையும் பிதற்றி கொண்டிருந்ததாக தெரிவிக்கிறார்கள்.

மகள்களின் சிறப்பான எதிர்காலத்திற்காக தான் இப்படி செய்ததாகவும் கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் விசாரணையின்போது கத்தி கூச்சல் போட்டு காவல் அதிகாரிகளுக்கு டென்சன் ஏத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த விசாரணையில் பல்வேறு ஷாக் தகவல்கள் வெளிவரலாம் என்றும், இதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இருவரும் மதனப்பள்ளி சிறையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.