சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

 

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

ட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில் மனுசனைக் கடிச்ச கதையாக அமைச்சரின் செயலால் அதிர்ந்து போயிருக்கிறது திமுக தலைமை. எதிர்க்கட்சிகளை ஏகத்திற்கும் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்து வரும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சொந்த கட்சியின் மூத்த தலைவரையே கடுமையாக தாளித்து எடுத்ததால் திமுக முன்னோடிகள் அதிருப்திக்குள்ளாக கட்சித் தலைமை அதிர்ந்து போயிருக்கிறது.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

தகவல் தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் அதிகம் தெரிந்தவர் என்பதால் கட்சியில் முக்கிய அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக கட்சியின் முன்னோடிகளையே கேலி செய்வதை வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுப்பார் முதல்வர் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் திமுகவின் மூத்த நிர்வாகிகள்.

நிதியமைச்சர் ஆவதற்கு முன்பிருந்தே பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜனின் டுவிட்டர் பக்கம் பரபரப்பாக இருந்து வந்தது. அதற்கு காரணம் அவரின் பதிவுகளும் எதிர் தரப்பினருக்கு அவர் கொடுக்கும் பதிலடியும் ரொம்ப சூடாகவே இருந்தது. பல நேரங்களில் சலசலப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வந்தன என்றாலும் அப்போது திமுகவுக்கு அவை பலமாகவே இருந்தன என்று சொந்த கட்சியினரே நினைத்து வந்தனர். ஆனால் நிதியமைச்சர் ஆன பின்னரும் அதே போக்கில் அவர் செல்வது சொந்த கட்சிக்கு சூனியம் வைப்பது போன்று ஆகிவருகிறது என்று சொந்த கட்சியினரே புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

எதிர்க் கட்சிக் காரர்களை ஒரு அமைச்சராக இருக்கக் கூடியவர் இப்படி எல்லாம் கடுமையாக விமர்சிக்கலாமா என்று முதல்வரின் கவனத்திற்கு புகார்கள் பறந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த 17 ஆம் தேதி அன்று லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு நிதியமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் ராஜன் கலந்து செல்லாதது கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது. மத்திய அரசின் நடவடிக்கைகளையும் மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளையும் கடுமையாக விமர்சிக்கும் அமைச்சர்பி.டி.ஆர் ஏன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லவில்லை என்று பாஜகவினரும் அதிமுகவினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் செய்தியாளர்கள் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்தனர்.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

அப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஏன் போகவில்லை என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 17 ஆம் தேதி அன்று நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு எனக்கு பத்தாம் தேதிக்கு பிறகுதான் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் நான் முன்னதாகவே பல்வேறு நிகழ்ச்சிகளை ஒப்புக்கொண்டு விட்டேன் இப்போது கூட வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. உடனே போய் விட்டு வர வேண்டாம் என்றாலும் அது முடியாத காரியமாக இருக்கிறது. லக்னோவிற்கு செல்ல வேண்டும் என்றால் மூன்று விமானத்தில் மாறி மாறி செல்லவேண்டும். அதற்கு ஒரு நாள் ஆகிவிடும் . அப்புறம் இங்கே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்க முடியாது. அதனால் நான் செல்லவில்லை. ஆனால் என் சார்பில் அறிக்கையை கவுன்சில் கூட்டத்தில் நான் சமர்ப்பித்து விட்டேன் என்று தெரிவித்தார்.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

இதில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு என்று அமைச்சர் சொன்னதை கொழுந்தியா வளைகாப்புக்கு செல்கிறேன் என்று சொன்னதாக சொல்லி, #வளைகாப்பு_ராஜன் என்ற ஹேஷ்டேக்கினை டிரெண்ட் செய்தும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டும் கலாய்த்து வந்தனர். மூன்று விமானத்தில் மாறி மாறி போக வேண்டும் என்பதால் லக்னோ போகவில்லை என்று அமைச்சர் சொன்னதை, முதல்வர் ஸ்டாலினிடம் தனி விமானம் கேட்டதாகவும் அதற்கு அவர் முடியாது என்று மறுத்ததாகவும் அதனால் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு அமைச்சர் பிடிஆர் போகவில்லை என்றும் நெட்டிசன்கள் போட்டு வறுத்து எடுத்து வந்தனர்.

பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் இதையே முக்கியமாக எடுத்துக் கொண்டு அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் தாளித்து எடுத்தனர். கொழுந்தியா பொண்ணு வளைகாப்பு என்று சொல்லுகிறார். இதெல்லாம் ஒரு காரணமா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்தார்.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

மதுரையில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்று சொல்லாமல், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்று சொன்னதால்தான் கொழுந்தியா பொண்ணு வளைகாப்பு என்று நெட்டிசன்கள் கொளுத்திப்போட்டனர். இதனால் கொதித்தெழுந்த பிடிஆர் இதெல்லாம் வடிகட்டிய முட்டாள்தனம் எனக்கு கொழுந்தியாள் இல்லை. எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும். பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டும். மாட்டு மூத்திரம் குடித்த மூளை கெட்டுப் போனவர்களா என்று கடுமையாக பதிலளித்தார்.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

நிதியமைச்சர் சொல்லாத ஒன்றை சொன்ன அண்ணாமலைக்கு எதிராக திமுகவினர் கொதித்து, #மன்னிப்புகேள்_அண்ணாமலை என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். பாஜகவினரும் இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்தனர்.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்
சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

இந்த நிலையில் தமிழக முன்னாள் நிதியமைச்சர் ஜெயக்குமார், தமிழக மக்களின் உரிமைகளை நிலை நாட்ட இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது வருத்தம். அதற்காக சொல்லப்படும் காரணமும் ஏற்றுக்கொள்ளத்தக்க காரணமல்ல . பொதுமக்கள் , வணிகர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்ற வகையில் 30க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி கூட்டங்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். ஒருமுறைகூட பங்கேற்காமல் இருந்ததில்லை. நிதியமைச்சராக எனது கடமையை செய்யாமல் இல்லை. அதனால் நிதியமைச்சராக தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம். தம்பி பிடிஆர் கவனமும் கொள் என்று அவர் கூறியிருந்தார்.

அதற்கு அவரையும் வச்சி செய்தார் பிடிஆர். ‘’ஒன்றிய நிதியமைச்சர், ஜிஎஸ்டி கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான் அனுப்பிய 14பக்க அறிக்கையை பகிர்வதற்கு முன் சில கயவர்களின் GST கவுன்சிலின் விதிகள் பற்றிய அறியாமையை வெளிக்கொணர காத்திருந்தேன். முன்னாள் அமைச்சர் போன்ற பெரிய மீன் சிக்குமென நினைக்கவில்லை. மேலும் வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்’’என்று எகிறியிருந்தார்.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

இப்படி சலசலப்புகளும் சர்ச்சைகளும் அதிகமாகி கொண்டிருந்த நிலையில் திமுக எம்பியும், திமுகவின் மூத்த தலைவருமான டிகேஎஸ் இளங்கோவன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘’பிடிஆர் எளிதில் எரிச்சல் அடைந்து விடுகிறார். அவர் பேசுவதில் பெரும்பாலான பேச்சுக்கள் எல்லாம் அவர் ஆத்திரமடைந்ததன் வெளிப்பாடாகவே இருக்கிறது. மற்றவர்கள் பேசும்போது எதிராளிகள் பேசும்போது அவர்கள் இதில் ஆத்திரமடைந்த விடுகிறார். ஒரு அரசியல்வாதி தன்னை ஒரு அரசியல்வாதியாக அவர் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதைத்தான் நான் எப்போதும் அவரிடம் சொல்வேன்.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

எதிரணியினர் நம்மை சீண்ட வேண்டும் என்று முயற்சிப்பார்கள். அதை நாம்தான் சரியான முறையில் அணுக வேண்டியது இருக்கும். மக்கள் செயல்களில் நாம் ஈடுபட வேண்டும் என்றுதான் நினைப்பார்களே தவிர சண்டை போட வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள் என அவருக்கு எப்போதும் நான் ரிந்துரைப்பேன். அனைத்து அமைச்சர்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கி வருகிறார் . பழனிவேல் தியாகராஜனுக்கும் அறிவுரைகள் வழங்கி இருக்கிறார். தற்போது பழனிவேல்ராஜன் பேசுவதை அவர் கவனித்து வருகிறார். ஏற்கனவே ஒருமுறை இது குறித்த அறிவுரை வழங்கி இருந்தாலும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று மீண்டும் அவருக்கு அறிவுரை வழங்குவார்’’ என்று தெரிவித்திருந்தார்.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

கட்சியின் மூத்த தலைவர் தனது நலன் கருதிதான் இப்படி சொல்கிறார் என்பதை கூட புரிந்துகொள்ளாமல், ’’கட்சியின் இரு தலைவர்களால் இருமுறை நீக்கப்பட்ட முட்டாள் பெருசு ஒருவர் என்னைப்பற்றி கூச்சலிட்டிருக்கிறார். இரண்டு கிலோ இறால் வாங்கி வருவதற்கு மட்டுமே தகுதியானவர் என்று அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்’’ என்று இரண்டு கிலோ இறால் வாங்கி வருவதற்கு மட்டுமே தகுதியானவர் என்னைப்பற்றி விமர்சிப்பதா என்று அவர் கேட்டிருந்தார். இரு தலைவர்களால் இருமுறை நீக்கப்பட்ட ஒருவர் என்னைக் கேள்வி கேட்பதா என்றும் அவர் கேட்டிருந்தார். முட்டாள் பெருசு என்றும் அவர் குறிப்பிட்டது கண்டு பொங்கி எழுந்தனர் திமுகவின் மூத்த நிர்வாகிகள்.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

கட்சியில் சில காரணங்களால் சிலர் மீது அவ்வப்போது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம்தான். அப்படித்தான் கட்சியின் தலைமைக்கு பங்கம் ஏற்படுகின்ற வகையில் இரண்டு முறை பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததால் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியியும் தற்போதைய திமுக தலைவர் மு. க. ஸ்டாலினும் இரண்டுமுறை இளங்கோவன் நடவடிக்கைகளுக்கு உள்ளானவர். அதற்காக அவர் எதுவும் கேள்வி கேட்க கூடாதா கட்சியில் மூத்தவர்கள் இல்லை என்றால் பிடிஆர் எல்லாம் எங்கிருந்து வந்திருப்பார். பெருசு என்று கேலி செய்வதா இவர் வேண்டுமானால் பொருளாதாரத்தில் கரைத்து குடித்தவராக இருக்கலாம் அதற்காக இரண்டு கிலோ இறால் வாங்கி வருவதற்கு மட்டுமே தகுதியானவர்கள் என்று தான்தான் பெரிய மனிதர் என்கிற நினைப்பில் பேசியதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் என்று கொந்தளித்து வந்திருந்தனர். இந்த விவகாரம் திமுக தலைமைக்கு போக, தலைமை நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் பிடிஆருக்கு பறக்க உடனடியாக சர்ச்சைக்குரிய அந்த டுவிட்டர் பதிவை நீக்கி விட்டார்.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின் – வாலை சுருட்டிய பிடிஆர்

ஆனாலும் எல்லாவற்றையும் முதல்வர் கவனித்துக் கொண்டிருக்கிறார். பிடிஆருக்கு அறிவுரை வழங்குவார் என்று டிகேஎஸ் சொன்னதைப்போல எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் பிடிஆருக்கு அறிவுரை வழங்குவோம் என்று நம்புகிறோம் என்று காத்திருக்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.