“50 நாட்களில் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது” – அமைச்சர் பிடிஆரை வெளுத்து வாங்கிய அன்புமணி!

“50 நாட்களில் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது” – அமைச்சர் பிடிஆரை வெளுத்து வாங்கிய அன்புமணி!

பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம் ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களுக்குள்ளாகவே திமுகவின் சாயம் வெளுத்து விட்டது.

“50 நாட்களில் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது” – அமைச்சர் பிடிஆரை வெளுத்து வாங்கிய அன்புமணி!

மத்திய அரசு கலால் வரியை ஒரே நாளில் உயர்த்தி விடவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கடந்த மார்ச் 13 ஆம் தேதி வெளியிட்ட போதும், பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரிகள் இதே அளவில் தான் இருந்தன. வற்றைக் கணக்கிட்டு தான் திமுக தேர்தல் அறிக்கைக் குழுவும், அதன் தலைவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு வாக்குறுதியை அளித்திருப்பார்கள். அப்போது, சாத்தியமான விலைக்குறைப்பு இப்போது சாத்தியமாகாதது ஏன்? சாத்தியமாகாது எனத் தெரிந்தே தவறான வாக்குறுதியை திமுக வழங்கியதா?

“50 நாட்களில் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது” – அமைச்சர் பிடிஆரை வெளுத்து வாங்கிய அன்புமணி!

இத்தகைய சூழலில், தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தால், அது தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும்; அதைத் தான் மாநில அரசு பார்க்க வேண்டும். வரிகளைக் குறைக்காமல் இருக்க சாக்குகளைக் கூறக்கூடாது. மத்திய அரசு வரிகளை உயர்த்தி விட்டது என்று கூறும் மாநில நிதியமைச்சர் பெட்ரோல், டீசல் மீது தமிழக அரசு எவ்வளவு வரி விதிக்கிறது என்பது மூடி மறைத்து விட்டார். சென்னையின் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.14. இதில், மாநில அரசின் வரி 34%, அதாவது, சுமார் ரூ.24.90. மத்திய அரசின் வரியில் கிடைக்கும் 1.40 ரூபாய் பங்கையும் சேர்த்தால், ரூ.26.30.

“50 நாட்களில் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது” – அமைச்சர் பிடிஆரை வெளுத்து வாங்கிய அன்புமணி!

ஒரு லிட்டர் டீசல் விலையான 92.32 ரூபாயில் தமிழக அரசுக்கு 25%, அதாவது, சுமார் ரூ.18.46 வரி கிடைக்கிறது. மத்திய அரசின் வரிகள் உயர்த்தப்பட்டாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகள் உயர்ந்தாலும், தமிழக அரசின் வரி வருமானம் அதிகரிக்கும். இதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் கூட மறுக்க முடியாது. திமுக அரசு அதன் தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தாமல் இருக்க பொய்யான காரணங்களைக் கூறக்கூடாது.

“50 நாட்களில் திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது” – அமைச்சர் பிடிஆரை வெளுத்து வாங்கிய அன்புமணி!

எதிர்க்கட்சியாக இருந்த போது பெட்ரோல், டீசல் விலைகளை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய திமுக, இப்போது அதை எதிர்க்கிறது. தேர்தலுக்கு முன் விலைகளைக் குறைப்பாதாகக் கூறிய திமுக இப்போது குறைக்க முடியாது என்கிறது. இது தான் இரட்டை வேடம்; இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்களை ஏமாற்ற அரசு முயலக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.