மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து அன்புமணி ஆர்ப்பாட்டம்!

 

மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து அன்புமணி ஆர்ப்பாட்டம்!

மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தார்.

மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து அன்புமணி ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தொற்று குறைந்ததால் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தது. இதுகுறித்து பாமக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகளின் வீடுகள் முன் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து 5 பேருக்கு மிகாமல் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்கள்.

மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து அன்புமணி ஆர்ப்பாட்டம்!

அவரின் ஆணைப்படி, தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், நாட்டு மக்களின் நலன் கருதி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தின் முன் மதுவிலக்குக்கு ஆதரவாகவும், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அறப்போராட்டம் நடத்தினார்.
இதே போல் சென்னையின் பிற பகுதிகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் பா.ம.க.வினர் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது