• April
    07
    Tuesday

Main Area

Main



“அன்புள்ள கில்லி” ஃபர்ஸ்ட் லுக்:  நாயின் மனகுரலில் நகரும் கதை!

அன்புள்ள கில்லி
அன்புள்ள கில்லி

இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத்  எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அன்புள்ள கில்லி’. இப்படத்தில் நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா, நடிகை சாந்தினி, மைம் கோபி, தொகுப்பாளர் ஆஷிக், நாஞ்சில் விஜயன், பூ ராமு, இந்துமதி, ஸ்ரீ ரஞ்சனி, பேபி கிருத்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு லேப்ராடர் வகை நாயும் நடிக்கிறது. இப்படத்தை Rise East Entertainment Pvt Ltd மற்றும்  Master Channel சார்பில் ஶ்ரீநிதி சாகர், E. மாலா இப்படத்தினை தயாரிக்கிறார்கள். ,மனிதன் நாய் இடையிலான உறவு குறித்து பேசும் இப்படம்  நாயின் மனகுரலில் கதை நகருவதாய் வெளிவரும் முதல் திரைப்படமாம்.  

ttn


இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.இப்படம் குறித்து கூறும் இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத், “அன்புள்ள கில்லி” படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைவரின் சுய வாழ்வும் ஒரு வகையில் இப்படத்தில் பிரதிபலித்திருக்கிறது. ஏனெனில் அனைவருமே செல்லப்பிராணி வளர்ப்பவர்கள். ஒரு வகையில் அவர்களின் வாழ்வு தான் இந்தக்கதை. ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது குறித்து வரும்போது எங்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி அதனை வெளியிட்ட திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் செல்லப்பிராணி வளர்ப்பவர் என்பது தான்' என்று கூறியுள்ளார்.

ttn

தொடர்ந்து பேசிய அவர், ' குழந்தைகள்  கொண்டாடும் படமாக இது அமையும் என்பதால் இப்படத்தை வரும் கோடை கால விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இசை மற்றும் டிரெயலர் வெளியீடு பற்றிய அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். 


 

2018 TopTamilNews. All rights reserved.