ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் பள்ளி மாணவர்களுக்கு டேப்லெட்

 

ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் பள்ளி மாணவர்களுக்கு டேப்லெட்

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் அச்சம் இன்றி புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் பள்ளி மாணவர்களுக்கு டேப்லெட்

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்திற்கு இடம் தேர்வு செய்வதற்காக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ஆய்வில் ஈடுப்பட்டனர். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “ கலைஞர் நினைவு நூலகம் மூலமாக மாணவர்கள், போட்டி தேர்வுக்கு தயாராகும் நபர்கள் பயன்படுவார்கள். அறிவொளி தருகின்ற கலங்கரை விளக்கமாக அமைய வேண்டும் என்கிற நோக்கத்தில் நிறுவப்பட உள்ளது. நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் குறித்த முடிவு முதல்வர் டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் சட்டசபையில் பேசி முடிவெடுக்கப்படும். மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்னும் வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை. அது வந்த பின்னர் மாணவர்களுக்கு ஊசி செலுத்த முடிவு எடுக்கப்படும்.

இந்தாண்டு அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் சேர்வார்கள். அவர்கள் அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதில் அரசு தயாராக உள்ளது. தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் அச்சம் இன்றி புகார் அளிக்கலாம். அதற்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் மடிக்கணினி கிடைக்காமல் விடுபட்டவர்கள் உட்பட அனைத்து மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்குப் 4G மற்றும் 5G இணையதள இணைப்புடன் டேப்லெட் வழங்கப்படும் எனக் கூறினார்.