அனந்தகிருஷ்ணன் மறைவு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 

அனந்தகிருஷ்ணன் மறைவு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அனந்தகிருஷ்ணன் மறைவு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் கொரோனாவால் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஐஐடி கான்பூர் தலைவராகவும் , தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராகவும் அனந்தகிருஷ்ணன் இருந்துள்ளார். இரண்டு முறை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

அனந்தகிருஷ்ணன் மறைவு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இந்நிலையில் அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், தமிழகத்தின் பெருமைக்குரிய கல்வியாளர் இழந்திருப்பது கல்வியுலகத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு . கருணாநிதி ஆட்சியில் பிஇ சேர்க்கையில் ஒற்றை சாளர முறையை அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தவர். இணையத்தில் தமிழின் பயன்பாட்டை எளிமைப்படுத்த ஒருங்கிணைந்த தமிழ் எழுத்துருக்கள் உருவாக்க உதவியவர். உள் கட்டமைப்பை உருவாக்கி அண்ணா பல்கலைக்கழகத்தின் கழை உலகெங்கும் பரப்பியவர் அனந்தகிருஷ்ணன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அதேபோல் திமுக எம்.பி.கனிமொழி, “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராகவும், ஐ.ஐ.டி கான்பூர் – தலைவராகவும் பணியாற்றிய பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் அவர்கள் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரை விமானத்தில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை பெற்ற போதெல்லாம் கல்வி என்பது சமுகத்தை மேம்படுத்தும் வழியாகவும்சமுகநீதிக்கான பாதையாகவும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துவார். தலைவர் கலைஞர் பெரிதும் மதித்த மனிதர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.” என்று கூறியுள்ளார்