மத்தியப்பிரதேச ஆளுராகக் கூடுதல் பொறுப்பு ஏற்கும் பெண்மணி இவர்தான்!

 

மத்தியப்பிரதேச ஆளுராகக் கூடுதல் பொறுப்பு ஏற்கும் பெண்மணி இவர்தான்!

இந்தியா மாநிலங்களில் மிகப் பெரிய நிலப்பரப்பு கொண்ட மாநிலம் மத்தியப் பிரதேசம்தான். இம்மாநிலத்தின் கவர்னராகப் பதவி வகித்தவர் லால்ஜி தண்டன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக விளங்கியவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் பணியைச் சிறப்புடன் செய்திகொண்டிருந்த இவர் உடல்நலக்குறைவால் நான்கு நாட்களுக்கு முன் (ஜூலை 21) மரணம் அடைந்தார்.

மத்தியப்பிரதேச ஆளுராகக் கூடுதல் பொறுப்பு ஏற்கும் பெண்மணி இவர்தான்!

லால்ஜி தண்டன் மீது பாரத பிரதமர் நரேந்திர மோடி பெரு மதிப்பு கொண்டிருந்தார். இவர் இறந்தபோது, “சமுதாயத்திற்கு அயராது உழைத்த லால்ஜி தண்டன், அவரது அரும்பணிகளுக்காக நினைவுகூரப்படுவார். சிறந்த நிர்வாகியாக விளங்கிய அவர், பொது நலத்திற்கு எப்பொழுதும் முக்கியத்துவம் அளித்தார். அவரது மறைவால் துயரம் கொள்கிறேன் என்று அஞ்சலி குறிப்பு எழுதியிருந்தார்.

லால்ஜி தண்டன் மறைவுக்குப் பிறகு அம்மாநில ஆளுநராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர்,  உத்தரப்பிரதேச ஆளுநர்  திருமதி ஆனந்திபன் படேலுக்கு மத்தியப்பிரதேச ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக அளித்துள்ளார். அவர் மத்தியப்பிரதேச ஆளுநரின் செயல்பாடுகளை தற்போதைய தனது கடமைகளுடன் சேர்த்து கூடுதலாக கவனிப்பார். மத்தியப்பிரதேச ஆளுநர் அலுவலகத்திற்கு வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை இந்த ஏற்பாடு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மத்தியப்பிரதேச ஆளுராகக் கூடுதல் பொறுப்பு ஏற்கும் பெண்மணி இவர்தான்!
Anandiben Patel

ஆனந்திபன் படேல் குஜராத்தைச் சேர்ந்தவர். 1994 முதல் 1998 வரை மாநிலங்கவை உறுப்பினராகப் பதவி வகித்தவர். 1998 முதல் 2016 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக வலம் வந்தவர். அமைச்சர் பொறுப்புகளை ஏற்று சிறப்பாகப் பனியாற்றிய இவருக்கு 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரை குஜராத் மாநில முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் எனும் பெருமை ஆனந்திபன் படேலுக்கு கிடைத்தது.

தற்போது உத்திரப் பிரதேச ஆளுநராக இருக்கும் ஆனந்திபன் படேலுக்கு மத்தியப் பிரதேச ஆளுநர் பொறுப்பு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.