லடாக்கில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வது நமது உரிமை.. ஆனால் இப்பம் ராணுவ படைகளை ஆதரிக்க வேண்டிய நேரம்… ஆனந்த் மகிந்திரா வலியுறுத்தல்….

லடாக்கில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வது நமது உரிமை.. ஆனால் இப்பம் ராணுவ படைகளை ஆதரிக்க வேண்டிய நேரம்… ஆனந்த் மகிந்திரா வலியுறுத்தல்….

நம் நாடு கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் அதேவேளையில், எல்லையில் அத்துமீறி தாக்குதல்களை அரங்கேற்றும் பாகிஸ்தான், நேபாளத்தின் புதிய வரைப்படத்தால் பதற்றம் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சமீபகாலகமாக குடைச்சல் கொடுத்தும் சீன ராணுவம் ஆகியவற்றையும் இந்திய அரசு சமாளித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று இந்திய-சீன எல்லை பிரச்சினையில் மிகவும் மோசமான திருப்பம் ஏற்பட்டது.

லடாக்கில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வது நமது உரிமை.. ஆனால் இப்பம் ராணுவ படைகளை ஆதரிக்க வேண்டிய நேரம்… ஆனந்த் மகிந்திரா வலியுறுத்தல்….

கடந்த திங்கட்கிழமையன்று இந்திய-சீன எல்லை பகுதியில் இரு தரப்பு ராணுவ வீரர்களும் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களால் தாக்கி கொண்டனர். இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியாகினர். இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சினை இருந்தாலும் 1975ம் ஆண்டு முதல் இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் யாரும் கொல்லப்பட்டது இல்லை. ஆனால் 45 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது கருத்துக்களை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

லடாக்கில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வது நமது உரிமை.. ஆனால் இப்பம் ராணுவ படைகளை ஆதரிக்க வேண்டிய நேரம்… ஆனந்த் மகிந்திரா வலியுறுத்தல்….

ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில், லடாக்கில் என்ன நடந்தது என்ற விவரங்களை பற்றி இறுதியில் அறிந்து கொள்வோம். அது நமது உரிமை. ஆனால் இப்போது, நமது தியாக வீரர்களுக்காக துக்கப்பட வேண்டும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்க வேண்டும். நமது ராணுவ படைகளுக்கு ஆதரவாக உறுதியாக நாம் நிற்க வேண்டும் என பதிவு செய்துள்ளார். எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய-சீன மோதல் குறித்த நிலவரங்களை மத்திய அரசு வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் சூழ்நிலையில், ஆனந்த் மகிந்திரா தனது கருத்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.