‘வெளிப்படையான, நியாயமான விசாரணை வேண்டும்’ சாத்தான்குளம் மரணம் பற்றி ஆனந்த் மஹிந்திரா

 

‘வெளிப்படையான, நியாயமான விசாரணை வேண்டும்’ சாத்தான்குளம் மரணம் பற்றி ஆனந்த் மஹிந்திரா

சாத்தான் குளம் மரணங்கள் தொடர்பான தம் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா. இவர், வாகனங்கள் உற்பத்தி செய்யும் மஹிந்திரா குழுமத்தின் சேர்மன்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களுள் ஒன்றான தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளத்தில் கடை வைத்திருப்பவர் ஜெயராஜ். இவரின் மகன் பென்னிக்ஸ். ஜூன் மாதம் 19-ம் தேதி ஊரடங்கு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்கச் சென்றனர் காவல் துறையினர். ஜெயராஜின் கடை திறந்திருந்தது. அதுவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விடச் சில நிமிடங்களே ஆகியிருந்தது.

‘வெளிப்படையான, நியாயமான விசாரணை வேண்டும்’ சாத்தான்குளம் மரணம் பற்றி ஆனந்த் மஹிந்திரா

இதனை அடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது. இதனால் சிகிச்சைக்குச் சென்றாலும் அது பலன் அளிக்காமல் இருவரும் இறந்துவிடுகின்றனர். இருவரின் மரணத்துக்குக் காவல்துறையே காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் பல குற்றசாட்டுகளைக் காவல் துறை மீது வைத்து வருகிறது. தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

சாத்தான் குளம் மரணங்கள் குறித்து சினிமா, விளையாட்டு, அரசியல் எனப் பலதுறை சார்ந்தவர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துவருகின்றனர்.. ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவு ஒன்றைப் பதிந்துள்ளார்.

‘இது எனது இந்தியா இல்லை. இதுபோன்ற சூழ்நிலையைக் கையாள்வதற்கான ஒரேவழி, விரைவான, நியயமான, வெளிப்படையான விசாரணையும் அதற்கு ஈடாக நீதியை விரைவாக வழங்குவதும்தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற ‘அதிகார வன்முறைகள்’ காவ்ல்துறையில் நிகழாமல் தடுக்க தேவையான மாற்றங்களை, சீர்த்திருத்தங்களை அரசும், நீதிமன்றமு, பொறுப்பு மிக காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாகத் தண்டிக்கப்பட்டு ‘ந்நிதி நிலை நிறுத்தப்படும்’ என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.