பிரச்சாரத்திற்கு தடை : உயர் நீதிமன்றம் ஓடிய ஆ.ராசா

 

பிரச்சாரத்திற்கு தடை : உயர் நீதிமன்றம் ஓடிய ஆ.ராசா

முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுக எம்.பி ஆ.ராசா கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை எடப்பாடி பழனிசாமி என்று கூறியிருந்தார். இது அரசியல் ரீதியான ஒப்பீடு, தனிமனித தாக்குதல் இல்லை என்றும் ஆ ராசா சொல்லியிருந்தாலும் இணையதளத்தில் இதற்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகின. ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் ராசாவை இனி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு புகார் அளித்தது.

பிரச்சாரத்திற்கு தடை : உயர் நீதிமன்றம் ஓடிய ஆ.ராசா

இதையடுத்து முதல்வர் பழனிசாமி பரப்புரை கூட்டத்தில் இதுகுறித்து பேசி கண்கலங்கினார். இதனால் ஆ.ராசா, முதல்வர் கண் கலங்கியது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அரசியலுக்காக அல்லாமல் உன்மையில் வேதனைப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றார். அதே சமயம் இந்த விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் செல்ல, இதுகுறித்து விளக்கமளிக்க, ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது . அந்த வகையில் ஆ.ராசா, உள்நோக்கத்துடன் தான் பேசவில்லை என்றும் வேண்டுமென்றே பொய்யாக பாஜக புகார் அளித்துள்ளது என்று தெரிவித்தார். இருப்பினும் ஆ.ராசாவின் விளக்கம் திருப்தியாக இல்லாததால், முதல்வர் பற்றி அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் திமுக எம்.பி ஆ.ராசா 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அத்துடன் திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசா பெயரையும் நீக்கியுள்ளது.

பிரச்சாரத்திற்கு தடை : உயர் நீதிமன்றம் ஓடிய ஆ.ராசா

இந்நிலையில் பிரச்சாரத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆ.ராசா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ளதால் அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆ ராசா அவசர வழக்காக விசாரிக்க கூறியதை ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.