மேகமலை வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி

 

மேகமலை வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி

தேனி

மேகமலை வனப்பகுதியில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சிறுத்தை ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது. தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின கோட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை, புலி, சிங்கவால் குரங்கு, யானைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான வன விலங்குகள் வசித்து வருகின்றனர். இவை அவ்வப்போது இரை தேடியும், தண்ணீர் தேடியும் மக்கள் மற்றும் வாகனம் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்லும்.

மேகமலை வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி

இந்த நிலையில் இன்று மதியம் மேகமலை 14-வது கொண்டை ஊசி வளைவில் 3 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று வனப்பகுதியை கடக்க முயன்றது. அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தூக்கி வீசப்பட்ட சிறுத்தை உயிரிழந்தது. இதனை கண்ட அந்த வழியாக சுற்றுலா சென்றவர்கள், தென்பழனி அடிவாரத்தில் உள்ள செக்போஸ்ட்டில் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் துக்காராம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் ஹைவேவிஸ் போலீசார். சிறுத்தையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை மேற்கொண்ட பிறகே சிறுத்தை இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தன்ர்