Home இந்தியா சாத்தியமில்லை என்ற அரசாங்கம்… 30 ஆண்டுகளாக மலைகள் வழியாக 3 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்த சாமானிய மனிதன்

சாத்தியமில்லை என்ற அரசாங்கம்… 30 ஆண்டுகளாக மலைகள் வழியாக 3 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்த சாமானிய மனிதன்

ஒடிசாவில் சாலை அமைக்க சாத்தியமில்லை என்று அரசு நிர்வாகம் கை விரித்த போதிலும், 30 ஆண்டுகளாக ஒரு சாமானிய மனிதன் மலைகள் வழியாக 3 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்து சரித்திரம் படைத்துள்ளார்.

சாத்தியமில்லை என்ற அரசாங்கம்… 30 ஆண்டுகளாக மலைகள் வழியாக 3 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்த சாமானிய மனிதன்

ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் உள்ள துலாபி என்ற கிராமத்தில் வசிப்பவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன் தங்கள் கிராமத்தை பிரதான சாலையுடன் இணைக்க மலைகளின் காடு வழியாக 3 கி.மீ. சாலை அமைத்து தரும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு நிர்வாகம் அந்த பகுதியில் சாலை அமைப்பது சாத்தியம் இல்லை என்று கிராமத்தினரிடம் தெரிவித்தது. அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் ஹரிஹர் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தங்களுக்கு சாலை தேவைப்பட்டால் அதை நாமே கட்ட வேண்டும் என்று நினைத்தனர். இதனையடுத்து ஒரு சுத்தி, மண்வெட்டி மற்றும் கடற்பாறையுடன் சாலையில் அமைக்கும் வேலையில் இறங்கினர்.

சாத்தியமில்லை என்ற அரசாங்கம்… 30 ஆண்டுகளாக மலைகள் வழியாக 3 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்த சாமானிய மனிதன்
ஹரிஹர் பெஹெரா

ஹரிஹர் இருபதுகளின் மத்தியில் இருந்தார். அவர் அடுத்த 30 ஆண்டுகளாக தினமும் தனது வயலில் வேலையை முடித்து விட்டு, சாலை அமைப்பதற்காக தனது சகோதரனுடன் சுத்தியால் மலைகளை செதுக்க தொடங்கினார். சகோதரர்கள் முதலில் காடுகளின் ஒரு பகுதியை அகற்றி, பெரிய பாறைகளை சிறிய வெடிபொருட்களால் வெடிக்கவும், சிறிய பாறைகளை வண்டிகளின் உதவியுடன் எடுத்து செல்லவும் முயன்றனர். ஆனால் குண்டுவெடிப்பு சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், பெரிய பாறைகளையும் சுத்தியால் உடைத்தனர். இதற்கிடையே கிருஷ்ணா பெஹெரா சிறுநீரக கோளாறு காரணமாக இறந்த விட்டார். இருப்பினும் ஹரிஹர் தனியாக சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார். சாலையையும் அமைத்து விட்டார்.

சாத்தியமில்லை என்ற அரசாங்கம்… 30 ஆண்டுகளாக மலைகள் வழியாக 3 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்த சாமானிய மனிதன்
ஹரிஹர் பெஹெரா உருவாக்கிய பாதை

ஹரிஹர் பெஹெரா இந்த பாதையை முடித்தவுடன், மற்றவர்களுக்கும் அவருடைய உதவி தேவை என்று நினைத்தார். ஏனென்றால் நயாகர் மாவட்டத்தில் பல டஜன் கிராமங்கள் எளிதில் அணுக முடியாத நிலையில் இருந்தன. இதனையடுத்து பழங்குடியினர் வசிக்கும் மற்றொரு எளிதில் செல்ல முடியாத சாலை வசதியில்லாத கிராமமான நேபாளத்தை ஹரிஹர் தேர்ந்தெடுத்தார். அந்த கிராமத்திலிருந்து சாலை இணைக்கும் வகையில் 300 மீட்டர் தொலைவுக்கு கற்களை பயன்படுத்தி சாலை அமைத்தார். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் கான்கிரீட்டை பயன்படுத்தி அந்த பகுதியில் சாலை அமைக்கும் வேலையில் இறங்கியது. ஹரிஹர் பணியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

சாத்தியமில்லை என்ற அரசாங்கம்… 30 ஆண்டுகளாக மலைகள் வழியாக 3 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்த சாமானிய மனிதன்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

அரசு கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதம்… விவசாயிகள் வேதனை!

ஈரோடு கோபி பகுதியில் செயல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்; திமுக கூட்டணிக்கு வன்னியர் கூட்டமைப்பு ஆதரவு!

9 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராமமூர்த்தி அறிவித்துள்ளார்.

“விஜய் பெயரை பயன்படுத்த தடை கோரிய வழக்கு” – மகனை எதிர்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு நிர்வாகிகளை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் அகில இந்திய தளபதி...

திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணம்; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் கொரோனாவுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த...
TopTamilNews