கரும்பு தோகை உரித்த மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொலை – விவசாயி கைது!

 

கரும்பு தோகை உரித்த மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொலை – விவசாயி கைது!


ஈரோடு

கோபி அருகே முன்விரோதம் தலையில் கல்லை போட்டு மூதாட்டியை கொலை செய்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

கோபி அருகே உள்ள பெருமாள்கோவில் புதூரைச் சேர்ந்தவர் மனோகரன் (64). விவசாயி. இவரது மனைவி வசந்தா(61). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். வசந்தா தனது வீட்டில் வளர்த்து வரும் கால்நடைகளை கீழ்பவானி வாய்க்கால் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு தினமும் மேய்ச்சலுக்காக ஓட்டி செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை அவர் கால்நடைகளை ஓட்டிச் சென்ற நிலையில், இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றபோது வசந்தா தோட்டத்தில் தலையில் பலத்த ரத்த காயத்துடன் சடலமாக கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சிறுவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், கோபி டிஎஸ்பி ஆறுமுகம், சிறுவலூர் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் நாமக்கல்பாளையத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் (41) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, சண்முக சுந்தரம் தான் வசந்தாவை கொலை செய்தது தெரிய வந்தது.

கரும்பு தோகை உரித்த மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொலை – விவசாயி கைது!


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:- கொலை செய்யப்பட்ட வசந்தா, பெருமாள் கோவில் புதூர் பகுதியில் உள்ள சண்முகசுந்தரம் தோட்டத்தின் அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவார். அப்போது, சண்முகசுந்தரம் தோட்டத்தில் பயிரிடப்பட்டு உள்ள கரும்பு தோகையை மாட்டுக்காக அவர் பறித்து சொல்வார். இதனை அறிந்த சண்முகசுந்தரம் வசந்தாவை கண்டித்ததால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மீண்டும் வசந்தா தோட்டத்தில் கரும்பு தோகையை உரித்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த சண்முக சுந்தரத்துக்கும், வசந்தாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், ஆத்திரமடைந்த சண்முகசுந்தரம் தோட்டத்தில் இருந்த கல்லை எடுத்து வசந்தா தலையில் போட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் குறத்து போலீசார், தொடர்ந்து சண்முக சுந்தரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.