அதிவேகமாக பரவும் கொரோனா : ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

 

அதிவேகமாக பரவும் கொரோனா : ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தெற்கு ரயில்வே பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே சமயம் ஒருபுறம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அடிக்கடி கைகளைக் கழுவுதல், முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

அதிவேகமாக பரவும் கொரோனா : ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அத்துடன் தேவையற்ற பயணங்களையும், கூட்டமாக பயணிகளையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் ரயில் பயணத்தை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்போர், தொற்று இருப்போர் ரயில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிவேகமாக பரவும் கொரோனா : ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ரயில் பயணத்தின் போது உணவு, தண்ணீர், கிருமிநாசினி, சோப்பு ஆகியவற்றை சொந்தமாக எடுத்துச் செல்லுங்கள் என்றும் பிற மாநிலங்களில் இருந்து ரயில் பயணிகள் அரசு அறிவித்தபடி இ பாஸ்,
கொரோனா பரிசோதனை போன்றவற்றை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் கூறியுள்ளது.