கோவிட் நோயாளிகளின் விவரங்களை மறைத்தால் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு.. இமாச்சல பிரதேச கிராம நிர்வாகம் அதிரடி

கோவிட் நோயாளிகளின் விவரங்களை மறைத்தால் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு.. இமாச்சல பிரதேச கிராம நிர்வாகம் அதிரடி

இமாச்சல பிரதேசம் சோலாங் கிராமத்தில் கோவிட் நோயாளிகளின் விவரங்களை மறைத்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என கிராம நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, இமாச்சல பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதிதாக 2,330 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மேலும் அன்று மட்டும் 32 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அந்த மாநிலத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 25,902 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

கோவிட் நோயாளிகளின் விவரங்களை மறைத்தால் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு.. இமாச்சல பிரதேச கிராம நிர்வாகம் அதிரடி
கொரோனா வைரஸ் பரிசோதனை

இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் 10 நாட்களுக்கு கொரோனா ஊரடங்கை இமாச்சல பிரதேச அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் சோலாங் மாவட்டத்தில் உள்ள சோலாங் கிராமத்தில், கோவிட் நோயாளிகளின் விவரங்களை மறைத்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் என சோலாங் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.

கோவிட் நோயாளிகளின் விவரங்களை மறைத்தால் குடும்பத்தின் மீது வழக்கு பதிவு.. இமாச்சல பிரதேச கிராம நிர்வாகம் அதிரடி
அபராதம்

மேலும், கிராமத்தில் கடைக்காரர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணியாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வெளியூரிலிருந்து கிராமத்துக்கு வந்தால் 7 தினங்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினரும் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என சோலாங் கிராம பஞ்சாயத்து செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.