கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் பயத்தை ஏற்படுத்திய சந்திரபாபு நாயுடு.. போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு

கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் பயத்தை ஏற்படுத்திய சந்திரபாபு நாயுடு.. போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு

கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் பயத்தை ஏற்படுத்தியதாக சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

குண்டூரின் மாவட்ட வக்கீல் பச்சலா அனில் குமார் என்பவர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சி பிரதிநிதிகள் கொரோனா வைரஸ் இரண்டாவது குறித்து ஊடகங்களில் தவறான தகவல்களை பேசியதாக அருந்தல்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: சந்திரபாபு நாயுடும், அவரது பிரதிநிதிகளும் ஊடகங்களில், கொரோனா வைரஸின் புதிய N440k உருமாற்றம் ஆந்திராவில் உருவானது.

கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் பயத்தை ஏற்படுத்திய சந்திரபாபு நாயுடு.. போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு
கொரோனா வைரஸ்

இது சாதாரண கொரோனா வைரஸை 10 முதல் 15 மடங்கு அதிக ஆபத்தானது மற்றும் அதன் பரவல் விகிதம் சாதாரண கொரோனா வைரஸை விட அதிகமாக உள்ளது என்று தெரிவித்தனர். கொரோனா வைரஸ் குறித்து இவர்களின் இந்த பொறுப்பற்ற மற்றும் தவறான அறிக்கை மற்றும் மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மரண பயம் காரணமாக மாநில மக்கள் பிற மாநிலங்களுக்கு செல்ல தயாராக உள்ளனர். மேலும் அவர்களது அறிக்கைகள் ஆந்திர மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் பயத்தை ஏற்படுத்திய சந்திரபாபு நாயுடு.. போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு
எப்.ஐ.ஆர்.

இந்த புகாரின் அடிப்படையில் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது கட்சி பிரதிநிதிகள் மீது அருந்தல்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தவிர கடந்த 8ம் தேதியன்று குர்னூல் 1 காவல் நிலையத்தில் சந்திரபாபு நாயுடு மீது 188 பிரிவின் கீழ் N440k உருமாற்றம் அடைந்த கொரோனா குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.