Home அரசியல் சரத் பவாரை கொரோனா வைரஸ் என சொன்ன பா.ஜ.க. எம்.எல்.சி. மீது எப்.ஐ.ஆர். பதிவு

சரத் பவாரை கொரோனா வைரஸ் என சொன்ன பா.ஜ.க. எம்.எல்.சி. மீது எப்.ஐ.ஆர். பதிவு

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. மேலவை உறுப்பினர் சேர்ந்த கோபிசந்த் படல்கர் நேற்றுமுன்தினம் சோலாப்பூர் மாவட்டம் பன்தர்பூருக்கு சென்று இருந்தார். அங்கு அவர் பேசுகையில், மகாராஷ்டிராவுக்கு சரத் பவார் ஒரு கொரோனா வைரஸ். நீண்ட காலம் மகாராஷ்டிராவை ஆட்சி செய்தார் ஆனால் அவர் பகுஜன் மக்களை மட்டுமே ஒடுக்கினார். எதிர்காலத்திலும் இதை செய்வார் என உறுதியாக சொல்கிறேன் என தெரிவித்து இருந்தார்.

சரத் பவாரை கொரோனா வைரஸ் என சொன்ன பா.ஜ.க. எம்.எல்.சி. மீது எப்.ஐ.ஆர். பதிவு

கோபிசந்த் படல்கர்

கோபிசந்த் படல்கரின் சர்ச்சைக்குரிய கருத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் கோபிசந்த் படேலின் கருத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததுடன் அவருக்கு எதிராக புனேவில் ஆர்ப்பாட்டமும் செய்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று கோபிசந்த் படல்கர் மீது பாரமதி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.

பா.ஜ.க.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரதீப் தேஷ்முக் இது குறித்து கூறுகையில், படல்கரின் அறிக்கையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த தலைவர்களின் இத்தகைய கருத்துக்கள் எப்போதும் பா.ஜ.க.வின் ஆதரவை கொண்டுள்ளன. இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் அரசியலின் தரத்தை கீழ்தரமாக பா.ஜ.க. முயற்சி செய்கிறது என தெரிவித்தார்.

சரத் பவாரை கொரோனா வைரஸ் என சொன்ன பா.ஜ.க. எம்.எல்.சி. மீது எப்.ஐ.ஆர். பதிவு
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

12 ஆம் வகுப்பு மாணவியுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் ஆசிரியருக்கு வலைவீச்சு

திண்டுக்கல் மாவட்டம் ஆரணி அருகே 12-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ஆசிரியரும், அரசு ஊழியருமானவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மழையால் வந்த சோதனை… டிராவை நோக்கி நகரும் டெஸ்ட் பைனல் – ரசிகர்கள் வேதனை!

50 ஓவர் உலகக்கோப்பைக்கு இணையாகப் பேசப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சப்பையாக முடிவது உள்ளபடியே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கென்று...

மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்று, கணவர் தப்பியோட்டம்!

கோவை கோவையில் செல்போனில் அடிக்கடி ஆண் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த மனைவியை, கணவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியின் உடலை தந்தூரி சிக்கன் போல சுட்ட கணவர் -கதற வைக்கும் காரணம்

மனைவியின் கொன்று அவரின் உடலை தந்தூரி சிக்கன் போல சுட்ட கணவரை போலீஸ் கைது செய்தது பாகிஸ்தானில் உள்ள கஹ்ரோர்...
- Advertisment -
TopTamilNews